இரண்டு வருடங்களின் பின்னர் மாதமொன்றில் வருகை தந்துள்ள அதிகமான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 96,507 ஆகும்.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் இந்த நாட்டுக்கு வருகை தந்த அதி கூடிய சுற்றூலப் பயணிகள் இதுவாகும் என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இந்த ஆண்டின் சனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் 82,327 பேர் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி மாதத்தில் வருகை தந்த 96,507 சுற்றுலாப் பயணிகளுடன் கடந்த இரண்டு மாத காலத்தின் போது இந்த நாட்டுக்கு 178,834 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டின் போது இந் நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 பேர்கள் ஆகும். பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களின் போது நாளாந்தம் இந்த நாட்டுக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியிருப்பது விசேட அம்சமாகும்.
இந்த ஆண்டின் போது சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தந்திருப்பது ரஸ்யா குடியரசிலிருந்தாகும். அந்த எண்ணிக்கை 28,818 ஆகும். இந்திய சுற்றுலாப் பயணிகள் 24,495 பேர் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் 18,084 பேர், ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள் 13,119 பேர் மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 13,062 பேர் வருகை தந்துள்ளனர்.
இந்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிய தரவுகளை ஒப்பீட்டுப் பார்க்கின்ற போது கடந்த செப்டெம்பர் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பில் கிரமமாக முன்னேற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். கடந்த செப்டெம்பர் மாதத்தில் 13,547 பேரும், ஒக்டோபர் மாதத்தில் 22,771 பேரும், நவம்பர் மாதத்தில் 44,294 பேரும் மற்றும் திசம்பர் மாதத்தில் 89,506 பேரும் என்ற வகையில் வருகை அறிக்கையிடப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.