
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. சட்டத்தின் பிரிவு 23 (1) இன் படி சுற்றுலா அபிவிருத்தி நிதி மேற்படி அதிகாரசபையால் கண்காணிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம்
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் (SLTPB) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தின் 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. உள்ளூர் மற்றும் உலகளாவிய ரீதியில் இலங்கையை சுற்றுலாப்பயணிகளின் பயண முடிவிடமாக ஊக்குவிப்பதிலும் சந்தைப்படுத்துவதிலும் பணியகம் முக்கிய பங்கு வகிக்கிறது..

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம்
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM) என்பது விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் தொழில்துறைகளில் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்க நிறுவப்பட்ட இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே முதன்மை நிறுவனமாகும்.

இலங்கை மாநாட்டு பணியகம்
இலங்கை மாநாட்டுப் பணியகம் (SLCB) உலகளாவிய சந்தையில் MICE இடம் தேடப்படும் இலங்கையின் வாய்ப்புகளை மேம்படுத்துதல் சம்பந்தமான பணிகளைத் தொடர்ந்தும் மேற்கொள்கின்றது. பணியகத்தின் செயல்பாடுகள் சுற்றுலாவுடன் தொடர்புடைய தொழில்வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் MICE ஐ தொடர்புபடுத்துகின்றது.