எமது நாட்டில் தங்கியுள்ள ரஸ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் அறவிடாது மேலும் 02 மாதங்களுக்கு வீசாக் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களினால் நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக்கு இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
தற்பொழுது ரஸ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் உக்கிரமடைந்துள்ள யுத்தத்திற்கு மத்தியில் சுற்றுலாவில் பயணத்தில் இலங்கை வந்துள்ள ரஸ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு தற்பொழுது நிலவும் சூழ்நிலை சுமுகமான நிலைக்கு வரும் வரை மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது இருப்பதுடன் அவர்களின் வீசாக் காலத்த்தை நீடிப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். தற்பொழுது ரஸ்யா சுற்றுலாப் பயணிகள் 11,463 மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 3,993 பேரும் எமது நாட்டில் தரித்திருக்கின்றனர்.
எனினும் இந்த வீசாக்களை நீடிப்புச் செய்தல் இந்த நாட்டில் சேவையாற்றுவதற்கு வழங்குகின்ற அனுமதிப்பத்திரமொன்று இல்லாத போதும் வீசா நீடிப்புச் செய்யும் நிபந்தனைகளை மீறினால் அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் உரிய அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் ஊடாக அமைச்சரவை தனது உடன்பாட்டை தெரிவித்துள்ளது.