- ஆண்டின் முதல் இரண்டு (02) வாரங்களின் போது 39,172 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
- அதிகமான சுற்றுலாப் பயணிகள் இரசியா நாட்டிலிருந்து வருகை தந்துள்ளனர்.
- சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்ட பூகோள தொடர்பாடல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் இந்த ஆண்டின் முதல் காலாண்டின் போது ஆரம்பிக்கப்படும்.
-என அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இந்த ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் சுற்றுலாப் பயணிகள் 39,172 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். கடந்த 14 நாட்களின் போது இந்நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் இரசியா நாட்டிலிருந்து வருகை தந்துள்ளனர் என்றும் அந் நாட்டிலிருந்து கடந்த இரண்டு வாரங்களின் போது வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 6,963 ஆக இருப்பதாகவும் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
கொவிட் தொற்றுநோய் நிலவிய கடந்த வருடத்தின் போது (2021) இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 194,495 ஆகும். இவர்களில் அதிகமானவர்கள் வருகை தந்திருப்பது கடந்த ஆண்டின் கடைசி மூன்று (03) மாதங்களின் போதாகும். அந்த மூன்று (03) மாத காலத்தின் போது இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 156,571 ஆகும்.
கடந்த இரண்டு வாரங்களின் போது இரசியா நாட்டுக்கு புறம்பாக அதிக அளவான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்திருப்பது இந்தியா, யுக்ரேன், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், மாலைதீவு, அவுஸ்திரேலியா, போலந்து, அமேரிக்கா போன்ற நாடுகளிலிருந்தாகும். சுற்றுலா மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இரசியா, யுக்ரேன், இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் விசேட மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுவதுடன் அதன் பெறுபேறாக அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று ஏற்பட்டுள்ளது என கௌரவ அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதைத் தொடர்ந்து தற்பொழுது அத் துறையில் ஈடுபடுவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு ஏதேனும் நிவாரணமொன்று கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இந் நாட்டுக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கு அரசு எடுக்க வேண்டிய எடுக்க முடியுமான சகல முன்னெடுப்புக்களையும் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த ஆண்டில் உலகின் பல்வேறுபட்ட நாடுகளில் நடைபெறும் சுற்றுலாக் கண்காட்சிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கை தற்பொழுது திட்டமிட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தினால் இனங் காணப்பட்ட நாடுகளில் விசேட மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த நாடு சுற்றுலா கைத்தொழில் துறையின் மூலமான சந்தையை இலக்காகக் கொண்டு பூகோள தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டங்களும் அமுல்படுத்தப்படுவதுடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டின் போது அவ்வாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.