- சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாக்கம் செலுத்துகின்ற தொழிலாளர் சட்டங்கள் அடுத்த ஆண்டின் போது திருத்தப்படும்....
- சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோர்களுக்கு சமூக காப்புறுதி முறைமையொன்று......
- ஹோட்டல் பாடசாலைகள் அடுத்த வருடத்தில் பட்டங்களை வழங்கும் உயர் கல்வி நிறுவமாக மாற்றப்படும்.......
- சுற்றுலா ஹோட்டல் முகாமை பயிற்சி பாடசாலையின் 41 ஆவது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் விழாவின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தாக்கம் செலுத்துகின்ற தொழிலாளர் சட்டங்கள் எதிர்வரும் வருடத்தின் போது திருத்தம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார். தொழிலாளர் அமைச்சுடனும் கலந்துரையாடி அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இலங்கை சுற்றுலா ஹோட்டல் பயிற்சி முகாமைத்துவ நிறுவனத்தின் 41 ஆவது வருடாந்த டிப்ளோமா வழங்கும் விழாவிற்கு வருகை தந்து அமைச்சர் இது பற்றி குறிப்பிட்டார். கொழும்பு சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது. கொரோனா தொற்று நோயின் காரணமாக 2019 ஆம் ஆண்டில் டிப்ளோமா சான்றிதழ் வழங்குவதை நடாத்துவதற்கு இயலாது போனமையின் காரணமாக இந் முறை 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு வருடங்களிலும் உள்ள மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கியமை விசேட நிகழ்வாகும்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இவ்வாறு கூறினார்.
சுற்றுலாக் கைத்தொழில் தற்பொழுது இருப்பது மிகவும் தீர்க்கமான சந்தர்பத்திலாகும். கொவிட் தொற்று நோய் நிலைமையின் காரணமாக இந்த துறையில் ஈடுபட்டுள்ள அனேகமானவர்கள் தற்பொழுது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். உலகின் அனேகமான நாடுகள் கொவிட் தொற்றுநோயின் பின்னர் படிப்படியாக திறந்துள்ளன. எமது நாடும் தற்பொழுது சுற்றுலா பயணிகளுக்கு திறந்து சுற்றுலா துறை படிப்படியாக முன்னேற்றம் கண்டுவரும் தருணமாகும்.
எமது நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலில் நேரடியாக மற்றும் மறைமுகமாக தங்கியிருக்கின்றவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 30 இலட்சமாகும். இந்தத் துறையில் இருப்பவர்களைப் பாதுகாத்துக் கொள்வது எமது பொறுப்பாகும். நாங்கள் பணியாற்றுவது அதற்காகவாகும். கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதியின் சௌபாக்கிய செயற்பணி கொள்கைக் கூற்றில் சுற்றுலாத் துறையின் மனித வள முகாமை பற்றி மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமை நிறுவனம் பட்டங்களை வழங்குகின்ற உயர் கல்வி நிறுவனமாக ஆக்குவதற்கு நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம். அது தொடர்பாக அமைச்சரவையின் அங்கிகாரத்தையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். அது தொடர்பாக தற்பொழுது அமுல்படுத்தப்படுகின்ற 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அது தொடர்பாக தற்பொழுது சட்ட வரைவுப் பிரிவுக்கு அனுப்பியுள்ளோம். பட்டம் அல்லது உயர் கல்விப் பாடநெறிகளை அறிமுகம் செய்வதன் ஊடாக பிராந்திய நாடுகளில் இது தொடர்பாக விருப்பமுள்ளவர்களுக்கு அந்தச் சந்தர்பத்தை வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அடுத்த வருடத்தின் ஆரம்ப காலாண்டின் போது இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
அதே போன்று, சுற்றுலாக் கைத்தொழில் என்பது, தற்பொழுது ஆபத்தான கைத்தொழிலாக மாறியுள்ளது. வெள்ளம் ஏற்பட்டாலும், சுனாமி ஏற்பட்டாலும், குண்டொன்று வெடித்தாலும் தற்பொழுது நாங்கள் முகங்கொடுத்துள்ள கொவிட் போன்ற பூகோள தொற்று நோயொன்று ஏற்பட்டாலும் ஆபத்துக்கு உள்ளாகின்ற துறையாக கைத்தொழிற் துறை உள்ளது. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும் திட்டமொன்றை அறிமுகம் செய்வதை தற்பொழுது கருத்திற் கொண்டு நாங்கள் பணியாற்றி வருகின்றோம். இவ்வாறான இடர் நிலைமைகளின் போது இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்து எங்களுடைய இலக்காகும்.
இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் தொழில்கள் தொடர்ந்து பேணிச் செல்லல் மற்றும் ஏனைய தொழில்சார் உரிமைகளைள பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு தாக்கம் செலுத்துகின்ற தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்வதாக சானாதிபதியின் கொள்கை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னுமொரு முக்கியமான விடயமாகும். கடந்த காலங்களில் கொரோனா நிலைமையுடன் எமக்கு இது தொடர்பாக ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இயலாது போயின. எதிர் வரும் வருடமாகும் போது தொழிலாளர் அமைச்சுடனும் கலந்துரையாடி அது தொடர்பாக ஏனைய செயற்பாடுகளை எடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
தற்பொழுது இந்தத் துறைக்கு புதிதாக பிரவேசிக்கின்ற டிப்ளோமாதாரியான உங்கள் அனைவருக்கும் நாங்கள் ஒரே சான்றிதழை வழங்குகின்றோம். இந்த நாட்டின் சுற்றுலாக் கைத்தொழில் கொவிட்டுக்கு முன்னர் இருந்த நிலைமையிலும் பார்க்க முன்னேற்றுவதற்காக இந்தப் பணிகளை செய்து கொண்டிருக்கின்றோம். பூகோள தொற்று நிலைமையின் ஊடாக எங்களுக்கு பலதரப்பட்ட தடைகள் ஏற்பட்ட போதும் நாங்கள் அது தொடர்பாக பணியாற்றி வருகின்றோம்.
சுற்றுலாத் துறையீன் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பர்ணாந்து, சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நதீகா வடலியத்த ஆகியோரும் இங்கு உரையாற்றினார்கள்.
2019 ஆண்டின் அதிஉன்னத மாணவராக கண்டி சுற்றுலா ஹோட்டல் பயிற்சி பாடசாலையின் என்.எஸ். பிரணாந்து என்ற மாணவன் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் கரத்தினால் விருது பெற்ற விதம்.