இந்த மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய சுற்றுலா பயணிகள் அக்டோபரில் மொஸ்கோவிலிருந்து கொழும்பு செல்லும் அனைத்து ஸ்ரீலங்கன் விமானங்களிலும் ஆசன முன்பதிவு செய்து வருகின்றனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அறிக்கையின்படி, இந்த விமானங்களுக்கான முன்பதிவு தற்போது நிறைவடைந்து வருகின்றது.

ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாரத்திற்கொருமுறை நேரடி விமானத்தை இயக்குகின்கிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல்.534 மொஸ்கோவிலிருந்து அக்டோபர் 09, அக்டோபர் 16, அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 30 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணிக்கவுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜூலை 31 முதல் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவையைத் ஆரம்பித்தது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை செப்டம்பர் 3 ஆம் திகதி ரஷ்யாவிற்கான ஒரு விஷேட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இது செயல்படுத்தப்பட்டது. கோவிட் தொற்றுநோயால் இலங்கை வெளிநாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தி, ரஷ்யாவின் மொஸ்கோவில் நடந்த சுற்றுலா கண்காட்சியில் கலந்துகொண்டபோது அதை மீண்டும் தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளூர் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் பல சுற்றுக்களாக விஷேட கலந்துரையாடல்களை நடத்தினார்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கானதொரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவை 'Bye One Get One’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொள்ள வழிவகுக்கும்.

2019 இலேயே அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். அந்த ஆண்டு இலங்கைக்கு வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 86,000 ஆகும். கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 2020 மார்ச் மாதம் வரை 49,397 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Shaping Tomorrow's Tourism Pioneers- SLCB Drives MICE Excellence at Rajarata University

The Sri Lanka Convention Bureau (SLCB), in collaboration with the Department of Tourism and Hospitality of Rajarata University of Sri Lanka, successfully conducted a specialized MICE Training Programme on 19 August 2026 at Rajarata University.

Continue Reading

Bridging Academia and Industry -SLCB hosts MICE Tourism Workshop at Sabaragamuwa University

On 11 August 2026, the Sri Lanka Convention Bureau (SLCB), in collaboration with the Department of Tourism Management of the Sabaragamuwa University, successfully conducted a specialized MICE Training Programme at Sabaragamuwa University of Sri Lanka

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்