சீகிரியாவை பிலாஸ்டிக் மற்றும் பொலிதீன்களற்ற இந்நாட்டின் முதலாவது சுற்றாடல் நலன் சுற்றுலா வலயமொன்றாக இந்த ஆண்டில் பிரகடணப்படுத்தப்படும். சுற்றுலா அமைச்சு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, மத்திய கலாச்சார நிதியம் மற்றும் வனசீவராசிகள் திணைக்களம் போன்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இது தொடர்பாக பணியாற்றிவருவதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
சீகிரிய சுற்றுலா வலயத்தில் நேற்று (16) ஆம் திகதி ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு மேலும் கூறியதாவது சீகிரியவைப் பார்வையிடுவதற்கு வருகின்ற உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை அதிகரிப்பதற்கும் அரசு செயற்பட்டு வருகின்றமையாகும். சீகிரிய சுற்றாடல் கட்டமைப்புக்கு பிரச்சினையொன்று ஏற்படாத வகையில் குடிநீர் வசதிகள் மற்றும் கழியலறை வசதிகள், வாகன தரித்து வைக்கும் இட வசதிகளை விஸ்தரிப்புச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய நிதியேற்பாட்டினை வழங்குவதற்கு பலதரப்பட்ட வகுதியினர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் இங்கு கூறினார்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சீகிரிய பிரதேசத்தை அண்டிய பிரதேசத்திற்கு உள்ளக விமான வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசு தனது கவனத்தைச் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் கூறிய அமைச்சர் சீகிரிய சுற்றுலா வலயத்தை அண்டி உள்ள சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை துரிதமாக தீர்ப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.