2022 ஆம் ஆண்டு முடிவடையும் போது இலங்கையை உலகின் பிரதான சுற்றுலா தளமாக மாற்றியமைப்பதாக சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
அடுத்த ஏப்ரல் 19, 20, 21 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இந்நாட்டின் மிகப் பெரிய சுற்றுலா மாநாடு தொடர்பாக நேற்று (24) ஆம் திகதி கொழும்பில் ஊடகங்களை அறிவுறுத்தும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இந்திய சுற்றுலா பிரதிநிதித்துவ அமைப்பு மற்றும் இலங்கை சுற்றுலா பிரதிநிதிகளின் அமைப்பு ஆகியவற்றின் பங்குபற்றலுடன் மாநாடு நடாத்தப்படுவதுடன் இந்திய சுற்றுலா பிரதிநிதிகளின் சங்கத்தின் 66 ஆவது வருடாந்த மாநாட்டுக்கு இணைவாக இந்நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் இந்த மாநாட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும்.
2018 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் 5 இலட்சத்திற்கு அண்மிய எண்ணிக்கையினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்த நிலைமையை மீண்டும் உருவாக்கிக் கொள்வதற்குத் தேவையான மேம்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வது இந்த மாநாட்டின் எதிர்பார்ப்பாக இருப்பதுடன் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சுற்றுலா பிரதிநிதிகள் ஐந்நூறு பேர் மற்றும் பூகோள ரீதியாக சுற்றுலா பற்றிய அறிவுறுத்துவதற்காக ஊடக அழைப்பாளர்கள் ஐம்பது பேர் இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் மூலம் இந்தியாவின் சகல பிரதேசங்களிலிருந்தும் இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் பாரிய அதிகரிப்பொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இந்நாடு சுற்றுலா துறை தொடர்பாக பூகோள ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்திய சுற்றுலா பிரதிநிதிகளின் அமைப்பு மற்றும் இலங்கை சுற்றுலா பிரதிநிதிகளின் அமைப்பு இங்கு முத்தரப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கும் எதிர்பார்க்கின்றது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள்.
இலங்கைக்கு இந்தியா மிக முக்கியமான நாடாகும். சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பலதரப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் ஐந்நூறு பேர் அளவில் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த பிரதிநிதிகளின் மூலம் இந்தியாவிலிருந்தும் உலகம் பூராகவும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு இலங்கையின் சுற்றுலாத் துறை பற்றி அறிவூட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று நோயினால் இலங்கை பாதிக்கப்பட்டது போன்று உலகின் சுற்றுலாத் துறையும் கடுமையான பின்னடைவுக்கு உட்பட்டுள்ளது. எமது நாட்டின் சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை புதிய திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துகின்றன.
சுகாதார சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட்ட ஒற்றோபர் மாதம் முதல் 5 மாதங்களினுள் நாங்கள் சுற்றுலாத் துறையில் மிகவும் பாரிய முன்னேற்றமொன்றை அடைந்துள்ளோம்.
ஒற்றோபர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் 22,000 பேர்,
நவெம்பர் மாதத்தில் 44,000 பேர்,
திசம்பர் மாதத்தில் 86,000 பேர்,
சனவரி மாதத்தில் 86,000 பேர் என்ற வகையில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் ஒரு இலட்சத்திற்கு அண்மித்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
பூகோள கொவிட் தொற்றுநோய் காரணமாக உலகின் கடுமையான ஆபத்திற்கு உள்ளான துறைகள் சுற்றுலாத்துறை மற்றும் சேவைத் துறை என்பனவாகும். கொவிட் தொற்றுநோய் சூழ்நிலையிலும் கூட 2021 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறக்கப்பட்டது கொவிட் சவால் நிலைமையின் போதும் கூட சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கிலும் ஆகும். பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நாங்கள் இன்று சுற்றுலாக் கைத்தொழிலை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை வெற்றி கொள்ளச் செய்துள்ளோம். எதிர் வரும் காலங்களில் எமது நாட்டின் சுற்றுலாக் கைத்தொழில் துரிதமாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். அது தொடர்பாக அரசொன்று என்ற வகையில் நாங்கள் பல முன்னெடுப்புக்களை எடுத்தோம். தற்பொழுது கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டில் நாங்கள் உலகின் முன்னிலையில் இருக்கின்றோம். நாங்கள் பூஸ்டர் ஊசி மருந்தை மக்களுக்கு வழங்குவதற்கு தொடங்கியது உலகின் அனேக நாடுகளுக்கு முன்னராகும். தற்பொழுது எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் தொன்னூறு சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொவிட் தொற்று நோய்க்கான தடுப்பூசி ஏற்றியுள்ளனர். இது சுற்றுலாத் துறைக்கும் பாரிய நன்மையாகும். இந்தியா என்பது எமது பிரதான சுற்றுலா சந்தையொன்றாகும். கொவிட் தொற்று நோய் நிலவிய கடந்த வருடமும் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பது இந்தியாவிலிருந்தாகும்.
கொவிட் தொற்று நோயுடன் புதிய சூழ்நிலைக்கு முகங்கொடுக்கும் வகையிலான நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாங்கள் சில தீர்வுகளை பிரதானமாகக் கொண்ட சுற்றலாத் துறைகள் (event tourism ) பற்றி அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். அதன் பிரகாரம் சர்வதேச மட்டத்தில் மாநாடு கருத்தரங்குகள் பலவற்றை எதிர்காலத்தில் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே போன்று சர்வதேச மட்டத்தில் கலாச்சார மற்றும் பிற விழாக்களை இலங்கையில் ஏற்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச மாநாடு கருத்தரங்குகள் நடாத்தப்படுகின்ற கேந்திர நிலையமாக இலங்கையை ஆக்குதல் எமது இலக்காகும்.
இந்திய சுற்றுலா பிரதிநிதிகள் அமைப்பின் (TAAI) 66 ஆவது வருடாந்த மாநாட்டை நடாத்துவதற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டமை இந்நாட்டு சுற்றுலாக் கைத்தொழில் தொடர்பாக புதிய திருப்புமுனைப் புள்ளியாக அமையும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதன் காரணமாக மாநாட்டை நடாத்துவதற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டமைக்காக அந்த சங்கத்திற்கு நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்திற்கு சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பிரணாந்து, இந்திய சுற்றுலா பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் ஜோதி மாயால், இலங்கை சுற்றுலா பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் போன்றவர்கள் பங்குபற்றினர்.