- சுற்றுலாக் கைத்தொழில் துறையில் ஹோட்டல் வழிகாட்டுநர்கள் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
- Visit Sri Lanka உத்தியோகபூர்வ சுற்றுலா கையடக்க செயலி இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்படும்.
-கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள்-
இந்நாட்டில் சுற்றுலாக் கைத்தொழில் தொடர்பாக உத்தேச உத்தியோகபூர்வ கையடக்க செயலியை (Mobile App) இந்த வருத்தினுள் அறிமுகம் செய்வதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இந்த கையடக்க செயலி Visit Sri Lanka எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் அது தற்பொழுது தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டதும் சுற்றுலாக் கைத்தொழில் துறைக்குரிய சகல இடங்களின் பிரவேச அனுமதிச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கும் இதன் ஊடாக இயலுமை கிடைக்கும் என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இந்த சுற்றுலா கையடக்க செயலி இந்நாட்டில் சுற்றுலா கைத்தொழில் துறையில் புதியதொரு திருப்பமாக அமையும் என நம்பிக்கை தெரிவிகின்ற அமைச்சர் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் செயற்பணி கொள்கைப் பிரகடணத்திற்கு ஏற்ப இது செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
www.hotelshipo.com நிறுவனத்தினால் அமுல்படுத்துவதற்குரிய சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களை ஒதுக்கீடு செய்யும் தொலைபேசி கையடக்க செயலி கௌரவ சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக நடாத்தப்பட்ட விழாவின் போது அமைச்சர் இது பற்றி குறிப்பிட்டார். விழா கடந்த வெள்ளிக்கிழமை (18) ஆம் திகதி சுற்றுலா அமைச்சில் நடைபெற்றது.
இந்த கையடக்க தொலைபேசி செயலியை உருவாக்கிய கம்பனி www.hotelshipo.com முழுமையாக இலங்கைக் கம்பனியொன்றாகும். அவர்களுடைய கையடக்க தொலைபேசி செயலியினூடாக இந்நாட்டில் காணப்படுகின்ற விலை வீதங்களில் ஹோட்டல் மற்றும் தங்குமிட வசதிகளை ஒதுக்கிக் கொள்வதற்கு இயலுமை கிடைக்கும். சகல வெளிநாட்டு நாணயங்களின் ஊடாக இந்த ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இயலுமை கிடைக்கின்றமை விசேட காரணியாகும். இந்த நாட்டில் அமுல்படுத்தப்படும் இது போன்ற கையடக்க தொலைபேசி செயலிகள் வெளிநாட்டு கம்பனிகளினால் நடாத்திச் செல்லப்படுவதுடன் இதன் காரணமாக வருடாந்தம் அமேரிக்க டொலர் 800 மில்லியன் அளவிலான தொகையொன்று இந்நாட்டுக்கு இழக்கப்படுவதாக உரிய கம்பனி குறிப்பிடுகின்றது. இந்த கையடக்க செயலியில் இந்நாட்டில் சகல ஹோட்டல்களின் தகவல்களை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய நிறுவனமொன்று இது போன்ற கையடக் செயலியொன்றை அறிமுகம் செய்வது மிகவும் அற்புதமானது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் செயற்பணி கொள்கை பிரகடணத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இணைய தளத்தின் ஊடாக ஹோட்டல்களை ஒதுக்குதல், போக்குவரத்து வசதிகளை வழங்குதல், வழிகாட்டுநர்கள் உள்ளக விமானப் பயணங்களை ஒதுக்குதல் மற்றும் சுற்றுலாத் துறையில் கவர்சியான இடங்களுக்கு பிரவேசிக்கக் கூடிய விதத்தில் மத்திய மென்பொருள் முறைமையொன்று (Single boking software) தயார் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Visit Sri Lanka உத்தியோகபூர்வ சுற்றுலா கையடக்க செயலி அதன் ஒரு ஆரம்பமாகும். இந்த சுற்றுலா கையடக்க செயலியின் ஊடாக சுற்றுலாத் தளங்கள், ஹோட்டல்கள், சிற்றுண்டிச் சாலைகள், சுற்றுலாத் தகவல்கள், விமான வரைபடங்கள், தரப்படுத்தப்பட்ட சுற்றுலா வழிகாட்டுநர்கள், சுற்றுலா பொலீஸ் அவசர அழைப்புச் சேவையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
சுற்றுலாக் கைத்தொழில் தொடர்பாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதை துரிதப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தற்பொழுது இந்த நாடு சுற்றுலா கவர்ச்சிகரமான இடங்களை சமூக ஊடகங்களின் ஊடாக பிரபல்யப்படுத்துவதற்கு நிகழ்ச்சித்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக தனியார் துறையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கௌரவ அமைச்சர் கூறினார். சுற்றுலாக் கைத்தொழில் தொடர்பாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர்கள் திரு. டீ. சன்னசூரிய, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பர்ணாந்து, பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க, hotelshipo நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் கீர்த்தி ஹேரத் ஆகிய அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.