- இந்நாட்டுக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்குத் தேவையான சகல முன்னெடுப்புக்களையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சுற்றுலா அமைச்சர் ஆலோசனை.
- சுற்றுலாப் பயணிகளின் கொவிட் காப்புறுதி ஒப்பந்தம் அமேரிக்க டொலர் 7,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பெப்ரவரி மாதத்தின் முதல் 4 நாட்களினுள் 11,535 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நாட்டுக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கினார். தற்பொழுது இது தொடர்பாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மேலதிகமாக சுற்றுலா வலயங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பிரயாணம் செய்கின்ற பொது போக்குவரத்துச் சேவைகளுக்குரிய அரச நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு கௌரவ சுற்றுலா அமைச்சர் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு மேலும் ஆலோசனை வழங்கினார்.
தற்பொழுது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக சுற்றுலா பொலீஸ் புறம்பானதொரு பொலிஸ் அலகாக தாபிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கல்கிஸ்ச, உனவடுன சுற்றுலா பொலீஸ் நிலையங்களின் நிர்மாணிப்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம், மிரிஸ்ச சுற்றுலா பொலீஸ் நிலையத்தை புதிதாக தாபிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாக செலவிடப்பட்ட தொகை ரூபா 5.3 மில்லியன்கள் ஆகும். எதிர்காலத்தில் தற்பொழுது வர்த்தமானியின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள சகல சுற்றுலா வலயங்களையும் அண்டிய வேறான சுற்றுலா பொலீஸ் அலகுகளை தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய கௌரவ சுற்றுலா அமைச்சர் இந்நாட்டுக்கு வருகை தருகின்ற சகல சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சகல வகுதியினர்களினதும் பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.
தற்பொழுது இந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது. பெப்ரவரி மாதத்தின் முதல் 04 நாட்களின் போது இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11,535 ஆகும். அந்த நான்கு நாட்களின் போது அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்திருப்பது பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதியாக இருப்பதுடன் அந்த எண்ணிக்கை 3,335 ஆகும். கொரோனா தொற்று நோயுடன் கடந்த ஆண்டில் இந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் 194,495 பேர் வருகை தந்துள்ளதுடன் கடந்த மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் 82,327 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதே வேளை இந்நாட்டுக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள் கொவிட் காப்புறுதி ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொள்ளுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த காப்புறுதி ஒப்பந்தப் பெறுமதி அமேரிக்க டொலர் 7,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என கெளரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இதற்கு முன்னர் காப்புறுதி ஒப்பந்த தொகையாக இருந்தது அமேரிக்க டொலர் 5,000 ஆகும். எனினும் அது தொடர்பாக அறவிடப்படுகின்ற தொகையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அறவிடப்படுவது அமேரிக்க டொலர் 12 மாத்திரமேயாகும். இந்தக் காப்புறுதி ஒப்பந்தத்தின் நலன்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் கூறினார்கள்.