- சகல பிரசைகளுக்கும் டிஜிடல் பணப் பையொன்று.....
- இந்த ஆண்டில் நகர சபை மற்றும் பிரதேச சபைகள் 100 டிஜிடல் மயப்படுத்தப்படும்....
- 2025 ஆம் ஆண்டாகும் போது அரசின் சகல அலுவலகங்களும் டிஜிட்ல மயப்படுத்தப்படும்......
சுற்றுலாக் கைத்தொழிலுக்கும் LANKA QR குறியீட்டை அறிமுகம் செய்வதற்கு திட்டம்......
டிஜிடல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகித்ததன் பின்னர் சகல பிரசைகளுக்கும் டிஜிடல் பணப்பையொன்றை அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக விளையாட்டு, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் கூறினார்கள். வெளிநாட்டு பயண கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், விவாகரத்துச் சான்றிதழ் உள்ளடங்கலாக தங்களுடைய அத்தியவசிய தனிப்பட்ட ஆவணங்களை தங்களது கையடக்க தொலைபேசியில் “டிஜிடல் பணப்பையில்” வைத்துக் கொண்டு தேவையான போது சமர்ப்பிப்பதற்கு அதன் ஊடாக இயலுமை கிடைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 30 மாத காலத்தினுள் இந்த செயற்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் கௌரவ அமைச்சர் குறிப்பிட்டார்.
கையடக்க தொலைபேசி மூலம் பணம் செலுத்துவதற்கு மத்திய வங்கியினால் அறிமுகம் செய்கின்ற LANKA QR குறியீடு கம்பஹா மக்களுக்கு உரிமையாக்கும் நிகழ்விற்கு நேற்று (22 ஆம் திகதி) வருகை தந்த அமைச்சர் அங்கு இது பற்றி குறிப்பிட்டார். கம்பஹா நகர சபை விளையாட்டு மைதானத்தில் கம்பஹா சகல அரச மற்றும் தனியார் வங்கிகளின் பங்குபற்றலுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைபெற்றது.
தற்பொழுது நாட்டின் பிரதான 13 நகரங்கள் இந்த LANKA QR குறியீட்டின் ஊடாக பணம் செலுத்தும் செயற்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளன. வங்கி மற்றும் வங்கியல்லாத பிரதான நிதி நிறுவனங்கள் 20 மாத்திரம் இது தொடர்பாக தற்பொழுது உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் நாடு பூராகவும் 290,000 இற்கு அண்மித்த வியாபாரச் சமூகமொன்று இது தொடர்பாக தொடர்புபட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் போது நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் 100 டிஜிடல் மயப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் என கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இங்கு மேலும் குறிப்பிட்டார். கடை வாடகை, நில வாடகை, பொது வரி சேகரித்தல், வீதி வரைபட கொடுப்பனவு செலுத்தல் என்பவற்றை டிஜிடல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கும் அக் கொடுப்பனவு தொடர்பாக LANKA QR குறியீட்டை அறிமுகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டாகும் போது கிராம சேவையாளர் அலுவலகத்திலிருந்து ஆட்களைப் பதிவு செய்தல் திணைக்களம் முதல் அரசின் சகல நிறுவனங்களையும் டிஜிடல் மயப்படுத்தலுக்கு உள்ளடக்குவதாகவும் நாட்டினுள் டிஜிடல் தொழில்நுட்ப புரட்சியொன்றை ஏற்படுத்துவதாகவும் கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த கௌரவ சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுகங்க அவர்கள் LANKA QR குறியீடு சுற்றுலாக் கைத்தொழிலிலிலும் அறிமுகம் செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அது தொடர்பாக உரிய பிரிவுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலகின் அனேகமான நாடுகள் பலதரப்பட்ட துறைகளுக்கு டிஜிடல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொவிட் தொற்று நோயைத் தொடர்ந்து இவ்வறான நவீன முறமைகளின் தேவைகள் அதிகமாக எழுந்துள்ளதாக சுட்டிக் காட்டிய கௌரவ அமைச்சர் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கு தற்பொழுதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் குறிப்பிட்டார். டிஜிடல் மயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு தற்பொழுது பல முன்னெடுப்புக்களை அரசாங்கம் எடுத்துள்ளது. எதிர்காலத்தில் புதிய சட்டமூலங்கள் பலவற்றை அறிமுகம் செய்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
அரச நிறுவனங்கள் டிஜிடல் மயப்படுத்தலுக்கு உட்படுத்துவதன் சவால்களை முதலில் பொறுப்பேற்றது நாங்கள் என சுட்டிக் காட்டிய கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு டிஜிடல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தல் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த ஆண்டின் நடுப்பகுதியாகும் போது முதல் கட்டத்தை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பிரகாரம் விமான பயணியொருவர் விமான நிலையத்திற்கு வருகை தந்து விமானமொன்றில் அமரும் வரையும் மற்றுமு் இந்த நாட்டுக்கு வருகை தருகின்ற விமான பிரயாணி விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்திலிருந்து வெளியேறும் சந்தர்ப்பம் வரையுமான சகல செயற்பாடுகளையும் டிஜிடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். எதிர்வரும் வருடத்தின் போது நிறைவு செய்வததற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க விமனா நிலையத்தின் புதிய பிரயாணிகள் கரும பீடங்களையும் முழுமையாக டிஜிடல் மயப்படுத்துவதற்கு உட்படுத்துவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வுக்கு மத்திய வங்கியின் உதவி ஆளுநர் திரு தர்ம சிறி குமாரதுங்க, கம்பஹா நகராதிபதி திரு எரங்க சேனாநாயக்க, கம்பஹா பிரதேச செயலாளர், கம்பஹா பிரதேச வங்கிகளின் சகல வங்கித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.