புத்தாண்டில் கடந்த முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 11,380 சுற்றுலாப் பயணிகள் இந் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன் அது சுற்றுலாக் கைத்தொழில் எழுச்சி பெறுவதற்கு மேற்கொண்டு வரும் நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றியை வெளிக்காட்டுகின்றது என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
அதன் பிரகாரம் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பது இரசியா நாட்டிலிருந்தாகும். அத்தோடு அந் நாட்டிலிருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 2032 சுற்றுலாப் பயணிகள் ஆகும். இந்திய சுற்றுலாப் பயணிகள் 1809 பேரும், உக்ரேயின் சுற்றுலாப் பயணிகள் 1041 பேரும், ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள் 775 பேரும், இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகள் 709 பேரும், கஸகிஸ்தான் சுற்றுலாப் பயணிகள் 506 பேரும், மாலைதீவு சுற்றுலாப் பயணிகள் 506 பேரும், அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் 414 பேரும் மற்றும் போலந்து சுற்றுலாப் பயணிகள் 282 பேரும் சனவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களின் போது இந்நாட்டு வருகை தந்துள்ளனர்.
கொவிட் தொற்றுநோய் நிலைமையின் காரணமாக மூடப்பட்டிருந்த நாடு மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விடப்பட்டதன் பின்னர் 2021 ஆம் ஆண்டில் 194,888 சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சனவரி மாதத்தில் 1,682 பேரும், பெப்ருவரி மாததில் 3,305 பேரும், மார்ச் மாதத்தில் 4,561 பேரும், ஏப்ரல் மாதத்தில் 4,161 பேரும், மே மாதத்தில் 1,497 பேரும், யூன் மாதத்தில் 1,614 பேரும், யூலை மாதத்தில் 2429 பேரும், ஒகத்து மாதத்தில் 5,040 பேரும், செத்தெம்பர் மாதத்தில் 1,3547 பேரும், ஒற்றோபர் மாதத்தில் 22,771 பேரும், நவம்பர் மாதத்தில் 44,297 பேரும் மற்றும் திசம்பர் மாதத்தில் 89,506 பேருமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டின் சனவரி மாத்தின் போது இந்நாட்டுக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,682 ஆக சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர், சுற்றுலாத் துறையை எழுச்சி பெறச் செய்வதற்கு பங்களிப்புச் செய்கின்ற சகலரும் இந்த வெற்றியின் பங்காளர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்நாட்டுக்கு வெளிநாட்டுச் செலாவாணி கிடைக்கின்ற பிரதான வழியாக இருந்தது சுற்றுலாத் துறை ஆகும். இது வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக சுற்றுலாத் துறையில் காணப்பட்ட நிலைமையிலும் பார்க்க சிறந்த நிலைமைக்கு முன்னேற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்ற அமைச்சர் அது தொடர்பாக சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப பணியாற்றுதல் மற்றும் உரிய பிரகாரம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளல் சகல இலங்கையர்களினதும் கடமையாகும் எனவும் குறிப்பிட்டார்.
குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை எழுப்புகின்றவர்கள் நாட்டில் எழுச்சி பெறும் பொருளாதாரம் தொடர்பான உண்மையான தகவல்களை வேண்டுமென்றே மக்களிடமிருந்து மறைத்து, புத்தாண்டில் சுற்றுலாக் கைத்தொழிலுக்கு சிறந்த வருடமாக இருக்கும் என்றும் பணியாற்றுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.