மிரிஸ்ச கடற் பகுதிக்கு திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற சுற்றுலா கப்பல்களின் உரிமையாளர்களுக்கு வன சீவராசிகள் திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரையறைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு தடைகள் ஏற்படாத வகையிலும் திமிங்கிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அதனை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மிரிஸ்ச கடற்பகுதியில் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கு செல்கின்ற சுற்றுலாக் கப்பல்களுக்கு வனசீவராசிகள் திணைக்களம் தடைகளை விதித்துள்ளதாக நேற்று ஊடகங்கள் மற்றும் சமுக ஊடகங்களின் ஊடாக செய்திகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கலந்துரையாடலொன்றுக்கு மிரிஸ்ச கப்பல்களின் உரிமையாளர்களின் சங்க பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்திருந்தார். மிரிஸ்ச கடற்பிரதேச திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருகின்ற கப்பல் உரிமையாளர்கள் இங்கு தமது பிரச்சினைகளை முன்வைத்ததுடன், திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கு பின்னேரம் 2 மணியின் பின்னர் மாத்திரம் வனசீவராசிகள் திணைக்கள அலுவலர்கள் அனுமதி வழங்குவதாக இங்கு தமது பிரச்சினைகளை சமர்ப்பித்தனர். அவ் விடயம் தொடர்பாக வனசீவராசிகள் திணைக்கள அலுவலர்கள் பலதரப்பட்ட சிக்கல் நிலைமைகளின் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என பதில் வழங்கினர். தேவையான அலுவலர்கள் இன்மை இதற்கு காரணமொன்றாகும் என அவர்கள் குறிப்பிட்டனர். அப்பொழுது மாத்தறை மாவட்ட செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் ஒரு இலட்டசம் தொழில்வாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆட்ச்சேர்ப்புச் செய்துள்ள தொழில்பெறுநர்களில் பத்துப் பேரை இந்த விடயம் தொடர்பாக இணைப்புச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு மாவட்ட செயலாளரின் உடன்பாடு கிடைக்கப்பெற்றது.
திமிங்கிலங்களைப் பார்வையிடுவதற்கு செல்கின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக மிரிஸ்ச மீன்பிடித் துறைமுக வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இங்கு நீண்ட நேரம் கவனம் செலுத்தப்பட்டது. கஞ்சன விஜேசேகர இராஜாங்க அமைச்சரைத் தொடர்பு கொண்ட அமைச்சர் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினார். அதன் பிரகாரம், மீன்பிடி மற்றும் வனசீவராசிகள் அமைச்சுக்களின் அமைச்சர்களின் மற்றும் அலுவலர்களின் கூட்டமொன்றை கூட்டி மிரிஸ்ச கடல் பகுதியில் திமிங்கிலங்களைப் பார்வையிடுவதுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சுற்றுலா அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.