காலி கோட்டையின் கொடிகல கல்லிலிருந்து கடலுக்குள் பாயும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு அச் செயற்பாட்டை மேலும் தொடர்ந்து செல்வதற்கு மாற்றுவழி நிகழ்ச்சித்திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
தொல்பொருளியல் பாதுகாப்புச் செயற்பாடுகளின் காரணமாக 15 வருடங்களாக அந்த இடத்திலிருந்து கடலுக்குள் பாயும் செயற்பாட்டில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் அச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு இயலாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஊடக மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் வெளியான அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் தொல்பொருளியல் திணைக்கள அலுவலர்களுடன் நேற்று (22) ஆம் திகதி விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தினார். இந்த இளைஞர்களின் கடலுக்குள் பாயும் செயற்பாட்டை முழுமையாக நிறுத்தவில்லை என அதன் போது குறிப்பிட்டார். அவர்கள் மேற்கொள்கின்ற ஒரு பாய்ச்சல் மாத்திரம் உரிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல் நிர்மாணத்தின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இங்கு குறிப்பிடப்பட்டது.
காலிக் கோட்டையின் இந்த இடம் கொடிகல காவல் அரணாக அறிமுகம் செய்யப்படுவதுடன், ஒல்லாந்தர் காலத்து செய்தி பரிமாற்றல் நிலையம் மற்றும் கப்பல்களுக்கு சமிஞ்சை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்ட இடமாகவும் தொல்பொருளியல் அலுவலர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் புராதன வெளிச்ச வீட்டின் அடித்தளம் மற்றும் கொடி வைக்கப்பட்டிருந்த இடம் கண்டறியப்பட்டுள்ளன. உரிய கொடி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆணிகள் கூட வெளிப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்கள அலுவலர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இளைஞர்கள் ஒரு பாய்ச்சலுக்கு தீவின் அவ்விடம் ஊடாகவே செய்ய முடியும் என அவர் சுட்டிக் காட்டினார். உலக வங்கி நிதியுதவியின் கீழ் இந்த இடத்தின் புணர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தொல்பொருளியல் திணைக்களத்தின் அலுவலர்கள் குறிப்பிட்டார்கள்.
இளைஞர்கள் பலர் மேற்கொள்கின்ற இந்த ஆபத்தான பாய்ச்சல் இலங்கையில் மாத்திரமன்று உலகம் பூராகவும் பிரபல்யமானது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார். அதன் காரணமாக உரிய இளைஞர்களுக்கு அச் செயற்பாட்டை மேலும் தொடர்ந்து பாதுகாப்பாக செய்வதற்கு மாற்றுவழி நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு தொல்பொருளியல் அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.