- சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் எமது நாட்டுக்கு வரவழைக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டைக் கொண்டாடுவோம் சிறி லங்கா ஆண்டு என பிரகடணப்படுத்தப்படும்…….
- ஐந்து வருட பூகோள தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு தொடர்பாக விசேட செயலாளர் அலுவலகமொன்று……
- கடந்த 12 நாட்களில் 24,773 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்………..
சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் எமது நாட்டுக்கு வரவழைக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டுடைக் கொண்டாடுவோம் சிறி லங்கா ஆண்டு என பிரகடணப்படுத்துவதற்கு உத்தேசிக்ப்பட்டுள்ளது. இந்த நாட்டை ஐந்து வருட பூகோள தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏற்ப அதனை அமுல்படுத்துவதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இந்த ஐந்து வருட பூகோள தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டதின் ஒருங்கிணைப்பு தொடர்பாக விசேட செயலாளர் அலுவலகமொன்றையும் தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சகல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு, முகாமை மற்றும் மேற்பார்வை தொடர்பான பணிகள் நியமிக்கப்பட்டுள்ள இச் செயலாளர் அலுவலகத்திற்கு கையளிக்கப்படும்.
இலங்கையில் சுற்றுலா மேம்பாடு தொடர்பாக ஐந்து வருட ஒருங்கிணைந்த பூகோள தொடர்பாடல் நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் பிரகாரம் தேசிய ரீதியாக அறிவித்தல்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் முகாமை, அறிவித்தல் விளம்பர நிகழ்ச்சித்திட்ட முகாமை அலகு, ஆக்கப்பாடுகள் பிரதிநிதித்துவ நிறுவனம், ஆராய்ச்சி பிரதிநிதித்துவ நிறுவனம் என்பன நியமிக்கப்பட்டுள்ளதன. மேலும் இலங்கை சுற்றுலாக் கைத்தொழில் துறையின் பிரதான அடிப்படை விற்பனைச் சந்தைகள் 25 உள்ளடங்கும் வகையில் சர்வதேச ரீதியாக நியமிக்கப்பட்ட பொது மக்கள் இணைப்பு கம்பனிகள் 08 (PRCS) மற்றும் சுற்றுலாத்தள பிரதிநிதித்துவ கம்பனிக் 08 (DRC) ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவன கட்டமைப்பொன்றும் தாபிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.
சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் செயற்பணி கொள்கை கூற்றுக்கு ஏற்ப இந்த பூகோள மேம்பாட்டு நிகழ்ச்சித்ட்டம் அமுல்படுத்தப்படும். இதற்கு முன்னர் இருந்த ஒருங்கிணைந்த பூகோள மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுதைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக சுற்றுலா துறைக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் அமுல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பூகோள சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது தற்பொழுதைய அரசின் கீழாகும். சனாதிபதியின் சுபீட்சத்தின் செயற்பணி கொள்கை கூற்றுக்கு ஏற்ப 2025 ஆம் ஆண்டாகும் போது சுற்றுலாக் கைத்தொழில் மூலம் ஐக்கிய அமேரிக் டொளர் 10 பில்லியன் அளவான வருமானமொன்றை பொருதாரத்திற்கு இணைப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. எமது நாட்டுக்கு வரவழைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 06 மில்லியன்கள் ஆகும். கொவிட் தொற்று நோய் நிலைமையின் கீழும் கூட இந்த இலக்கில் மாற்றம் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இந்த பூகோள மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா, இரசியா, வளைகுடா நாடுகள், அமேரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, சுவீடன், டென்மார்க், போலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளில் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படும். இங்கு கவர்ச்சிகரமான சுற்றுலா தளமாக இலங்கையை மேம்படுத்துவதற்கு பலதரப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதே வேளை தற்பொழுது இந்நாட்டுக்கான சுற்றுலாப் பிரயாணிகளின் வருகையில் கிரமமான அதிகரிப்பொன்று காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கடந்த 12 நாட்களில் 24,773 சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து திசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை இந் நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 129,762 ஆகும். இந்தியா, இரசியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கஸகஸ்தான், அமேரிக்கா, பிரான்ஸ், கனடா, மாலைதீவு போன்ற நாடுகளிலிருந்து இந்தச் சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தந்துள்ளனர். குளிர் காலத்தை இலக்கு வைத்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் ஐரோப்பிய நாடுகளில் விசேட மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அந் நாடுகளின் பல விமான சேவைக் கம்பனிகள் இலங்கைக்கு நேரடி விமான பயணங்களை ஆரம்பித்துள்ளன. மேலும் இலங்கையில் நடமாடும் எல்லைகள் இற்றைப்படுத்தப்பட்டமை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்தது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள்.