09 சுற்றுலா தளங்கள் நிலைபெறுதகு சுற்றுலா தளங்களாக துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். நாட்டின் 09 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த சுற்றுலாத் தளங்களைத் தெரிவு செய்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் உயிரியல் பல்வகைமை நிதிச் செயற்றிட்டத்தின் ஒத்துழைப்புடன் இவை அமுல்படுத்தப்படும்.09 சுற்றுலா தளங்கள் நிலைபெறுதகு சுற்றுலா தளங்களாக துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். நாட்டின் 09 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் இந்த சுற்றுலாத் தளங்களைத் தெரிவு செய்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் உயிரியல் பல்வகைமை நிதிச் செயற்றிட்டத்தின் ஒத்துழைப்புடன் இவை அமுல்படுத்தப்படும்.
சீகிரிய நிலைபெறுதகு சுற்றுலாத் தளம், பிலிகுத்துவ தேசிய உரிமை சுற்றுலாத்தளம், வானதவில்லு கங்கேவாடிய சுற்றுலாத்தளம், எல்லாவள எல்ல இயற்கை சுற்றுலாத்தளம், வவுல்பனே ஹுணுகல் குகை சுற்றுலாத்தளம், நெடுந்தீவு, மதுனாகல வெண்நீர் ஊற்று, பானம சமூக பிரதேசம் மற்றும் மிஹிந்தலை என்பன இந்த 09 சுற்றுலாத்தளங்களில் அடங்குகின்றன. இவற்றில் சீகிரிய மற்றும் யால தேசிய வனம் பிலாஸ்டிக் பயன்பாடில்லாத முதலாவது சுற்றாடல் நலன் நிலைபெறுதகு சுற்றுலாத்தளமாக மேம்படுத்தல் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளனது.
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்தல், சனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தின் செயற்பணி கொள்கைக் கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். அதன் பிரகாரம் இந்த நிலைபெறுதகு சுற்றுலாத்தளங்களின் அபிவிருத்தியை அமுல்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்பொழுது இந்த நிலைபெறுதகு சுற்றுலாத் தளங்களின் அபிவிருத்தி தொடர்பாக உரிய மாகாண சுற்றுலா அதிகாரிகளுக்கு பொறுப்புக்கள் சாட்டப்பட்டுள்ளது. தற்பொழுது அவர்கள் இது தொடர்பாகத் தேவையான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நோயுடன் சுற்றாடல் நலன் சுற்றுலாத்துறை தொடர்பாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிக கவர்ச்சி ஏற்பட்டுள்ளது என சுட்டிக் காட்டுகின்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அதன் பிரகாரம் இந்த நாட்டின் சூழல் கட்டமைப்போடு இணைந்த கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளங்களுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக பின்பற்ற வேண்டிய உபாய வழிகள் தொடர்பாகவும் அரசின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார். சுற்றுலா முதலீடு தொடர்பாக அங்கிகாரத்தை வழங்கும் போது இது தொடர்பாக மேலதிக கவனம் செலுத்தப்பட்டது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற சுற்றுலாச் செயற்றிட்டங்களுடன் தொடர்புடைய திட்டங்கள் நிலைபெறுதகு வழிகாட்டல்களுக்கு ஏற்ப அங்கிகாரத்திற்கு சமர்ப்பித்தல் அத்தியாசியமாகும். அது தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு நிலைபெறுதகு சுற்றுலா மேம்பாடு தொடர்பான அபிவிருத்திக்கான உள்ளக அலகொன்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினுள் தாபிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.