- இவ்வாண்டு இலங்கைக்கான சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை ஒரு இலட்சத்தைத் தாண்டும்......
- நவம்வர் மாதம் 01 ஆம் திகதி முதல் நேற்று வரை (28) 41,177 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்........
இவ்வாண்டு இங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த சனவரி மாதம் முதல் நவெம்பர் 28 ஆம் திகதி வரை இந்நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 101,872 ஆகும். நவம்வர் மாதம் 01 ஆம் திகதி முதல் நேற்று வரை (28) 41,177 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிபரங்களுக்கு ஏற்ப அதிகமான சுற்றுலாப் பிரயாணிகள் கடந்த 28 நாட்களினுள் வந்திருப்பது இந்தியாவிலிருந்தாகும். இதற்கு மேலதிகமாக, இரசியா, ஐக்கிய இராச்சியம், பாகிஸ்தான், ஜேர்மனி, மாலைதீவு, பிரான்ஸ், அமேரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேயா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13,368 ஆகும். இந்தியாவிற்கு அடுத்ததாக கடந்த 28 நாள் காலப்பகுதியின் போது அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருப்பது இரசியாவிலிருந்தாகும். அந்த எண்ணிக்கை 3,449 ஆகும்.
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் சுற்றுலா மேம்பாட்டு பணியகம் இரசியா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் உள்ளடங்கலாக பல நாடுகளில் மேம்படுத்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறி லங்கன் கம்பனி 06 வருடங்களின் பின்னர் இரசியாவிற்கும் மற்றும் பிரான்சுக்கு நேரடி விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இரசியாவின் AERO FLOT விமானக் கம்பனியும், பிரான்சின் AIR FRANCE விமானக் கம்பனியும் இலங்கைக்கு இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நேரடி விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை அந்த நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு கவர்ந்திழுப்பதற்கு காரணமாக இருந்தது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார். தற்பொழுது ஐரோப்பிய வலயத்தின் பல நாடுகளில் இலங்கை விசேட மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவடையும் போது 150,000 இற்கும் 180,000 இடையில் சுற்றுலாப் பிரயாணிகள் இந்நாட்டிற்கு வருகை தருவார்கள் என சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை எதிர்வு கூறியுள்ளது. அடுத்த ஆண்டாகும் போது சுற்றுலாக் கைத்தொழில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.