- தடை செய்யப்பட்ட 06 நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களின் போது எமது நாட்டுக்கு வருகை தரவில்லை..........
- சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிபரங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகின்றார்.......
தடை செய்யப்பட்ட 06 நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கடந்த 14 நாட்களின் போது எமது நாட்டுக்கு வருகை தரவில்லை என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார். சுற்றுலா அதிகாரசபையின் புள்ளிவிபரங்களின் ஊடாக இது உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது பற்றி குறிப்பிட்டார்.
ஒம்க்ரோன் புதிய கொரோனா மாதிரி வைரஸ் காரணமாக தென்ஆபிரிக்கா, நபீபியா, போட்ஸ்வானா, சிம்பாப்வே, லெசடோ மற்றும் ஸ்வாசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து கடந்த 14 நாட்களுக்குள் வருகை தந்த சுற்றுலாப் பிரயாணிகள் இந்த நாட்டிற்கு வருகை தருதல் இன்று (28) நல்லிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் சிபாரிசின் படி சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இது பற்றி உரிய விமானக் கம்பனிகளுக்கு அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தவிர ஏனையவர்கள் கடந்த 14 நாட்களுக்குள் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்கு வருகை தந்துள்ளனரா என்பதை உரிய பிரிவுகள் தேடிப் பார்ப்பதாகவும் அதன் பிரகாரம் சுகாதாரப் பிரிவு ஏனைய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். குறிப்பிட்ட நாடுகள் தவிர ஏனைய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பிரயாணிகளுக்கு இந்த நாட்டுக்கு வருகை தருவதற்கு தடைகள் இல்லை என்றும் மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுக்கு வீசா வழங்கும் போது அவர்கள் மேலே குறிப்பிட்ட நாடுகளுக்கு பிரயாணம் செய்துள்ளனரா என்பது பற்றி ஆராய்ந்து பார்க்கப்படும் என்றும் கூறினார்.
எதிர்காலத்தில் இந்நாட்டில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள கிரிகட் போட்டிகள் உள்ளடங்கலாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற மற்றும் அப் போட்டிகளை பார்வையிடுவதற்கு வருகை தருவர்கள் தொடர்பாக என்ன கொள்கைகளைக் கடைப்பிடித்தல் வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவிற்கு விடையளிக்கும் போது முழுமையாக தடுப்பூசி ஏற்றியவர்கள் அந்தப் போட்டிகளை பார்வையிடுவதற்கு இந்த நாட்டுக்கு வருகை தரமுடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். அது தொடர்பாக ஏனைய நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவுடன் கலந்துரையாடி அவர்களின் சிபாரிசின் படி மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் குறிப்பிட்டார். தற்பொழுது உலகின் அனேக நாடுகளில் கொவிட் நிலைமையின் கீழ் சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தற்பொழுது இந்த நாட்டின் சனத்தொகையில் 90% சதவீதத்திற்கு அண்மித்த மக்கள் தொகை தடுப்பூசி ஏற்றியுள்ளனர். எனினும் கொவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பது சகலரினதும் பொறுப்பாகும். எனவே சுகாதார வழிகாட்டலின் படி புதிய நியாயப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களை பாதுகாத்து நாட்டை நடாத்திச் செல்லுதல் அரசாங்கத்தின் அபிலாசையாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.