சுற்றுலாவுக்கான உலகின் சிறந்த 20 நாடுகளில் முதல் 05 நாடுகளுக்குள் இலங்கையும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. Conde Nast Traveler சஞ்சிகை நடத்திய Readers Choice 2021 தரவரிசையில் இலங்கை 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. போர்த்துக்கல் முதல் இடத்தில் உள்ளதுடன் நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் மொராக்கோ நாடுகள் முறையே 2 ஆம், 3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்களை பிடித்துள்ளன.
உலகின் சிறந்த ஆரோக்கியமான பயண முடிவிடங்களுள் ஒன்றாக இலங்கையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிலும் Conde Nast Traveler சஞ்சிகை இலங்கையை Readers Choice தரவரிசையில் சிறந்த இடமாக மதிப்பிட்டிருந்தது.
உலகெங்கிலும் பிரசுரமாகும் Conde Nast Traveler இதழ், அதன் வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த தரவரிசையை மேற்கொள்கின்றது.