கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமானது உலகின் கிழக்கு மற்றும் மேற்குப் வலயங்களை இணைக்கும் ஆசியாவின் விமானப் போக்குவரத்துச் சேவை நிலையமொன்றாக அபிவிருத்திச் செய்யும் முதலாவது படிமுறையைக் குறிக்கும் வகையில், விமான நிலைய விரிவாக்கச் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டமானது பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று (25) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சுப நேரத்தில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந் நாட்டின் இரண்டாவது பாரிய அபிவிருத்தித் செயற்திட்டமாக கருதப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் நோக்கமானது இலங்கையின் அடையாளத்தை வெளிக்காட்டும் வகையில் சர்வதேச விமான ஓடுபாதைகளுக்கு இணைவாக புதிய திட்டத்திற்கு ஏற்ப விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாகும்.
முழுமையான செயற்றிட்டம் பூர்த்தியடையும் போது , தற்போது ஆறு மில்லியனாக இருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளைக் கையாளும் திறனானது, பதினைந்து மில்லியன் பயணிகள் வரை அதிகரிப்பதற்கு இயலுமை கிடைக்கும்.
யப்பான் இலங்கை ஒருங்கிணைந்த செயற்றிட்டமொன்றான கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்றிட்டத்தின் B - பொதி செயற்றிட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூபா 6 பில்லியன்கள் ஆகும். 2014 ஆம் ஆண்டின் போது பதவியில் இருந்த சனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் யப்பானின் முன்னாள் பிரதமர் சின்ஹுவா அபே ஆகியோரின் தலைமைலும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
புதிய செயற்றிட்டம் முழுமையாக நிர்மாணிக்பட்டு நிறைவடையும் போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கும் தளங்களின் அளவு 49 வரை அதிகரிப்பதுடன் அதன் மூலம் தற்போதுள்ளது போன்று விமானங்களை நிறுத்தி வைக்கும் வசதி இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
இங்கு வெளியேறும் ஓடு பாதை நீளமாக்கப்படுவதால் விமானங்கள் புதிய முனைய கட்டடத்துக்குள் பிரவேசிக்க வசதிகள் வழங்கப்படும்.
B பொதியின் கீழ் தூரவுள்ள முனையம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தற்போது காணப்படும் தளம் 269,000 கன மீட்டரிலிருந்து 479, 000 கன மீட்டர் வரை விரிவாக்கப்படுவதோடு, அதன் மூலம் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் கேள்விக்கும் மற்றும் விமானங்களை செயற்படுத்துவதற்கு உயர் வசதிகள் கிடைக்கும்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டமானது முழுமையாக நிறைவடையும் போது சோதனைக் கூடங்கள் 52 இலிருந்து 149 வரை அதிகரிக்கப்படுவதோடு குடிபெயர்வு கூடங்களின் எண்ணிக்கை 21 இலிருந்து 53 வரையும், குடிவரவு கூடங்களின் எண்ணிக்கை 27 இலிருந்து 83 வரையும் அதிகரிக்கப்படும்.
தற்போதுள்ள விமான பஸ்களுக்கான கதவுகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 16 வரை அதிகரிப்பதோடு விமான நிலைய ஓய்வு அறைகளின் எண்ணிக்கை 4 இல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்படும்.
உலகில் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஆசியாவின் விமான சேவைகள் மத்திய நிலையமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இலங்கையின் அடையாளமாக வெளிக்காட்டும் வகையில் அபிவிருத்தி செய்வது மஹிந்த சிந்தனையினதும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக் கூற்றினதும் முன்னுரிமை கொள்கையொன்றாகும். கட்டுநாயக்க விமானநிலைய விரிவாக்கத் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கும் சந்தர்ப்பத்தில் யப்பானின் இலங்கைக்கான தூதுவர் ஹிடேகி மிசுகோஷி (Hideaki MIZUKOSHI) அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக்க ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.


