- இந்தியன் ப்லொக் செயற்பாட்டாளர்களின் சந்திப்பின் போது பிரசன்ன ரணதுங்க கூறினார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ந்து வரும் நாட்களில் நேரடி விமானப் பயணத் தடவைகளை அதிகரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகஇ கௌரவ சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார். இந்தியாச் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிக்கு அதிகளவில் வரவழைக்கும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்துவதாகவூம் அவர் தெரிவித்தார்.
இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தினால் இந்தியாவை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் விசேட ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்தியா ப்லொக் செயற்பாட்டாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் அவர்கள் இது பற்றிக் குறிப்பிட்டார். இந்தியன் ப்லொக் செயற்பாட்டாளர்கள் 50 பேரை இந்நாட்டுக்கு வரவழைத்துஇ இலங்கை தொடர்பாக விரிவான விளம்பரமொன்றை வழங்குவதற்கு இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதுடன்இ தற்போதைக்கும் இதனது முதற் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். முதற் குழுவிற்கு இந்தியன் ப்லொக் செயற்பாட்டாளர்கள் 25 பேர் உள்ளடங்குகின்றனர். இக்குழுவினர் யாலஇ கதிர்காமம் ஆகிய பிரதேசங்களில் கடந்த நாட்களில் சுற்றுலாவில் ஈடுபட்டனர் என்பதுடன்இ அவர்கள் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களை கொழும்பு சினமன் லேக் இல் இடம் பெற்ற நற்புறவூச் சந்திப்பின் போது சந்தித்திருந்தனர்.
கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இதன் போதுஇ இந்தியா இலங்கையின் 05 முதன்மையான சுற்றுலா விற்பனைச் சந்தைகளில் ஒன்றாகும் எனவூம் தெரிவித்தார். 2019 ஆண்டின்; போதுஇ இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் 18மூ வீதத்திற்கு அதிகமானவர்கள் இந்தியாச் சுற்றுலாப் பயணிகள் எனவூம் அவர்கள் சுட்டிக் காட்டினார். கொவிட் தொற்று நோயின் பின்னர் இலங்கை மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்டு திறந்ததுடன்இ இது வரையில் இந்நாட்டிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவர்கள் இந்தியன் இனத்தவர்கள் ஆவர். கடந்த 18 ஆந் திகதி வரையில் இலங்கைக்கு 85இ655 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் 18 ஆந் திகதி வரையில் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள 24இ567 சுற்றுலாப் பயணிகளில் 8086 பயணிகள் இந்தியா இனத்தவர்களாவர்.
கொவிட் தொற்றுநோய் பரவூவதற்கு முன்னர் இலங்கை விமான சேவை இந்தியாவின் 11 பிரதான நகரங்களுக்கு வாரத்திற்கு 100 இற்கும் அதிகமான எண்ணிக்கையான விமானப் பயணங்களை நடைமுறைப்படுத்தியதாகவூம்இ கொவிட் தொற்று நோயின் பின்னர் தொடர்ந்து வரும் நாட்களில் இவ்விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவூம் தெரிவித்த கௌரவ அமைச்சர் அவர்கள் இதற்கு மேலதிகமாக இந்தியாவிற்கு புதிய பல விமானப் பயணங்களின் பொருட்டும் புதிதாக விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவூம் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்திற்கு விமான நிலையங்கள் மற்றும் ஏற்றுமதித் தயாரிப்பு வலய கௌரவ இராஜாங்க அமைச்சர் டீ.வீ. சானகஇ இலங்கை விமான சேவைகளின் தலைவர் திரு அஷோக் பதிரகே ஆகியோர் அடங்கிய குழுவினரும் இணைந்து கொண்டனர்.