- நாட்டினுள் ஏற்பட்டுள்ள மின்சத்தி பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலா கைத்தொழிலை தடைகளின்றி பேணிச் செல்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றின் தேவையை சுற்றுலா அமைச்சர் அமைச்சரவைக்கு சுட்டிக் காட்டினார்......
- இந்த வருட முடிவில் சுற்றுலாக் கைத்தொழிலிலிருந்து எதிர்பார்த்த வருமானம் ஐ.அ.டொ. 2.4 பில்லியன்கள் ஆகும்......
- ரஸ்யா மற்றும் உக்ரேய்ன் யுத்தத்தினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்கு இந்தியா, அவுஸ்திரேலியா, மாலைத்தீவு, மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா போன்ற நாடுகளை இலக்கு வைத்து சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள்.......
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சத்தி பிரச்சினையின் மத்தியில் சுற்றலாக் கைத்தொழிலை தடைகளின்றி பேணிச் செல்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றின் தேவையை சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அமைச்சரவைக்கு சுட்டிக் காட்டினார். சுற்றுலாக் கைத்தொழிலின் புத்தெழுச்சி தொடர்பில் அமைச்சரவைக் குறிபொன்று நேற்று (28) ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கலந்துரையாடலின் போது சமர்ப்பிக்கப்பட்டு மின்சக்தி பிரச்சினைக்கு மத்தியில் சுற்றுலாக் கைத்தொழிலுக்கு பாதிப்பு ஏற்பாடாதிருக்கும் வகையில் அரசு உறுதிப்படுத்தல் வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசு அமுல்படுத்திய தடுப்பூசியேற்றல் நிகழ்ச்சித்திட்டம் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் அவற்றை அமுல்படுத்தல் தொடர்பில் கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள வகுதியினர்களுக்கு வழங்கும் பயிற்சியை சரியாக அந்த வழிகாட்டல்களை பின்பற்றுகின்ற ஹோட்டல்கள், சுற்றுலா பிரதிநிதி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டுநர்களுக்கு சர்வதேச பிறமாணங்களுக்கு ஏற்ப வழங்கிய சான்றுப்படுத்தல்கள் போன்ற செயற்பாடுகளின் அடிப்படையில் 2021 சனவரி மாதம் முதல் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் ஆரம்பித்துள்ளது. அரசு சுற்றுலாக் கைத்தொழிலின் புத்தெழுச்சி தொடர்பாக எடுத்துள்ள முன்னெடுப்புக்களின் படி கொவிட் தொற்று நோய் நிலைமையிலும் சுற்றுலாக் கைத்தொழில் இலயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சில நாடுகளில் ஒன்றாக தற்பொழுது இலங்கையும் உள்ளடங்கியுள்ளது என கௌரவ அமைச்சர்கள் சமர்ப்பித்த அமைச்சரவை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கருதத்தகு அதிகரிப்பொன்று தற்பொழுது ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடும் அமைச்சர், இந்த வருடத்தின் நேற்றைய திகதியாகும் போது 274,211 சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டார். மாச்சு 1 முதல் மாச்சு 27 ஆம் திகதி வரை இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிக்ளின் எண்ணிக்கை 95,377 ஆகும். இந்த வருட முடிவில் சுற்றுலாக் கைத்தொழிலின் ஊடாக அமேரிக்க டொலர் 2.4 பில்லியன் வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும் இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்கு இலங்கை முகங்கொடுத்துள்ள வெளிநாட்டு செலாவாணிப் பிரச்சினையை வெற்றி கொள்வதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என அமைச்சர் அமைச்சரவையில் குறிப்பிட்டார்.
இந்நாட்டுக்கு சுற்றுலாக் கைத்தொழிலின் பிரதான சுற்றுலா மூல சுற்றுலாச் சந்தைகள் இரண்டாவன ரஸ்யா மற்றும் உக்ரெயின் ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் யுத்த நிலைமையின் காரணமாக இந்நாட்டுக்கு சுற்றுலாப் பணிகள் வருகையில் ஏற்படுத்தக் கூடிய பாதகமான தாக்கத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு எதிர்வரும் கிரிஸ்மஸ் குருத்து சுற்றுலா காலத்தினை இலக்காகக் கொண்டு இந்தியா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா போன்ற நாடுகளை இலக்கு வைத்து சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் அமைச்சரவைக்கு மேலும் அறிவித்துள்ளார்.