அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமும் துரிதப்படுத்தப்படும்…..
ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படாத நிலப் பிரதேசங்களை மீண்டும் கையகப்படுத்திக் கொள்வதற்கு தீர்மானம்……
பாசிக்குடா மற்றும் அருகம்பே ஆகிய பிரதேசங்களை இலக்கு வைத்து உள்ளக விமானச் சேவைகள்……
பாசிக்குடா சுற்றுலா கடற்கரை பிரதேசத்தின் ஆரம்பத் திட்டம் 03 மாதங்களுக்குள் இற்றைப்படுத்துமாறும், அதன் அபிவிருத்திச் செயற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரதேசத்தில் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள நிலப் பகுதிகளில் இது வரை ஹோட்டல் நிர்மாணிப்புக்கள் இல்லையாயின் அந்த நிலப் பகுதிகளை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும் ஆலோசனை வழங்கினார்.
பாசிக்குடா சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் அவதானிப்பு சுற்றுப் பயணமொன்றின் பின்னர் அதிகாரிகள் மற்றும் பாசிக்குடா ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கத்திற்குமிடையே நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கினார். பாசிக்குடா மாழு மாழு ஹோட்டலில் கடந்த 18 ஆம் திகதி இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நாட்டின் எழில்மிகு கடற்கரை பகுதியாக இருக்கின்ற பாசிக்குடா கடற்கரை பிரசேதம் சுற்றுலா கடற்கரை பிரதேசமொன்றாக அபிவிருத்தி செய்யப்பட்டது புலிப் பயங்கரவாதிகளின் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னராகும். தற்பொழுதைய நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக சுற்றுலா விடயப் பொறுப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் பாசிக்குடா சுற்றுலா கடற்கரையோரப் பகுதியின் அபிவிருத்திக்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 156 ஏக்கர் காணி இந்த சுற்றுலா கடற்கரை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஒதுக்கப்பட்டது. அதில் 100 ஏக்கர் பிரதேசத்தில் 14 ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த கடற்கரை பிரதேசத்தில் 12 ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 56 ஏக்கர் நிலப்பரப்பில் வாகன தரிப்பிடம் மற்றும் வர்த்தக கட்டிடத்தொகுதியொன்று உள்ளடங்கலாக உட்கட்டமைப்பு வசதிகளை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த திட்டத்தை அமுல்படுத்தாது கைவிட்டிருந்தது.
கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் பாசிக்குடா கடற்கரையோரப் பகுதியை பார்வையிட்டதுடன் சில ஹோட்டல்களை அண்டிய கடற் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்கு பயன்படுத்த முடியாத இடங்களாக மாறியிருந்தமை கௌரவ அமைச்சரின் அவதானிப்புக்கு உட்பட்டது. உடனடியாக அந்த கடற்கரைப் பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்கு விடுவதற்கு இயலும் வகையில் தயார் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பொது வசதிகள் தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ள 56 ஏக்கர் நிலப் பகுதியை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
பாசிக்குடா சுற்றுலா கடற்கரை வலயத்தை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களினுள் உள்ளடக்கப்படாமை பற்றியும் இதன் போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. அவ் விடயம் தொடர்பாக துரித நிகழ்ச்சித்திட்டமொன்றைத் தயார் செய்யுமாறு கௌரவ அமைச்சர் ஆலோசனை வழங்கினார். அடுத்த மாதம் முதல் இந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கிய அமைச்சர் இலங்கை தொடர்பாக சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் தயார் செய்கின்ற சகல அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பாசிக்குடா சுற்றுலா கடற்கரையோரப் வலயம் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.
பாசிக்குடா சுற்றுலா கடற்கரையோர பிரதேசம் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்ற போது அவர்களுக்கு போக்குவரத்துப் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், சுற்றுலாப் பயணிகளை பாசிக்குடாப் பிரதேசத்தை நோக்கி வரைவழைப்பதற்கான கவர்ச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது சிக்கல் நிலைமையொன்று காணப்படுவதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் சுட்டிக் காட்டினார்கள். பாசிக்குடா மற்றும் அருகம்பை சுற்றுலா வலயங்களை இலக்கு வைத்து மட்டக்களப்பு விமான நிலையத்தை அண்டி உள்ளக விமானப் பயணங்களை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அது தொடர்பாக பதில் வழங்கிய அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.