கொவிட் தொற்று நோயின் பின்னர் இந்நாட்டில் நடைபெறுகின்ற பாரிய சுற்றுலா நிகழ்ச்சித்திட்டமான Raid Amazone களிப்பூட்டும் நிகழ்ச்சித்திட்டம் 600 விளையாட்டு வீரர்களின் பங்குபற்றலுடன் இம்முறை இலங்கையில் நடைபெறும். இந்த ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களின் கீழ் அதனை நாடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதலாவது கட்டம் மார்சு மாதம் 14 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையும் இரண்டாம் கட்டம் மாச்சு மாதம் 28 ஆம் திகதி (நேற்று) முதல் ஏப்ரல் 6 ஆம் திகதி வரையும் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கவுடுள்ள மெதிரிகிரிய, வேவல, கண்டலம, சீகிரிய, மஹவில்கமுவ பிரதேசங்களை இணைத்தவகையில் இது அமுல்படுத்தப்படும் என நேற்று (08) ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது. முதலாவது கட்டத்தின் போது 253 போட்டியாளர்களும் 63 பதவியணியினர்களும் பங்குபற்றுவார்கள். இரண்டாவது கட்டம் தொடர்பாக பங்குபற்றுகின்ற போட்டியாளர்களின் எண்ணிக்கை 216 ஆகும். பதவியணியினரின் 63 பேர் இதனுடன் இணைவார்கள். பதவியணி தொடர்பாக வைத்தியர்கள் 06 பேர், விநியோக பதவியணியினர், மீட்ப்பு நீச்சல் விளையாட்டு வீரர்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவார்கள்.
Raid Amazone எனும் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட பிரபல்யமான வருடாந்த சாகச விளையாட்டுப் போட்டியொன்றாகும். நடத்தல், வள்ளம் செலுத்துதல், மவுண்டன் சைக்கிள் மிதித்தல், வரைபடங்கள் மற்றும் திசைகாட்டிகளை உதவியாகக் கொண்டு கரடு முரடான வழியொன்றின் ஊடாக நடந்து வருதல், ஈட்டியெறிதல் போன்ற விளையாட்டுக்கள் பல இதில் உள்ளடங்குகின்றன. இம்முறை போட்டியின் அனுசரணையளிக்கும் விமான சேவையாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் செயற்படும். இம்முறையின் தொனிப்பொருளாக சீகிரிய உள்ளது. சீகிரிய கோட்டையின் தனித்துவமான விசேட தன்மையை வெளிப்படுத்தும் வகையில் விசேட உத்தியோகபூர்வ உடையொன்று இதற்கு உருவாக்கப்பட்டுள்ளது. போட்டித் தொடர் தொடர்பாக பங்குபற்றுகின்ற வெளிநாட்டு விளையாட்டு வீரர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு சிறிலங்கன் விமான சேவைக் கம்பனி விசேட விமானமொன்றினை சோடித்துள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் இலங்கை பாதுகாப்பான நாடொன்று என உலகிற்கு அறிவிக்கும் செய்தியொன்று என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். இதன் ஊடாக பாரிய பூகோள பார்வையாளர் தொகுதியொன்றினை கவர்ந்து கொள்வதற்கும், ஐரோப்பாவிற்கு வெளியில் சென்று சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை மீது திருப்பிக் கொள்வதற்கும் இயலுமாக அமையும் எனவும் சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். இந்நாட்டின் சுற்றுலா கைத்தொழில் முறையாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டும் சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார சிக்கல்களிலிருந்து வெளியேறுவதற்கு சுற்றுலா கைத்தொழில் கொவிட் தொற்றுநோயிற்கு முன் இருந்த நிலைமையிலும் பார்க்க உயர் நிலைக்கு கொண்டு வருதல் வேண்டும் என சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டுக்கு பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லெவடு, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, விமான நிலைய மற்றும் விமானக் கம்பனிகளின் தலைவர் அசோக் பதிரகே உள்ளடங்கலாக மேலும் பலர் இந்த ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.