- மத்தள சர்வதேச விமான நிலையத்தை காத்திரமான விமான நிலையமொன்றாக மாற்றியமைப்பதற்கான செயற்பாடுகள் விஸ்தரிக்கப்படும்.
- கடந்த வருடத்தில் மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தில் விமான பயண பிரயாணிகளின் கையாள்கை 32,957 ஆகும். கையாளப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 722 ஆகும்.
- இந்த ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் 2,919 பேர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மத்தளை சர்வதேச விமான நிலையத்தை காத்திரமான விமான நிலையமொன்றாக மாற்றியமைப்பதற்காக அரசு முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை இந்த வருடத்தில் மேலும் விஸ்தரிப்புச் செய்வதாக சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கு உலகின் முன்னணி விமான போக்குவரத்துக் கம்பனிகள் பலவற்றுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த வருடத்தின் போது அந்த விமானக் கம்பனிகள் மத்தளை விமான நிலையத்தில் சர்வதேச போக்குவரத்தை ஆரம்பிக்கும் என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.
கடந்த வருடத்தில் மத்தளை ராஜபக்ஷ விமான நிலையத்தில் 32,957 விமானப் பயணிகள் கையாளப்பட்டுள்ளனர். கையாளப்பட்டுள்ள விமானங்களின் எண்ணிக்கை 722 ஆகும். அவற்றில் 584 விமான கையாள்கையானது சர்வதேச விமானங்கள் என்பது விசேட அம்சமாகும். மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தில் கடந்த ஒரு வருட காலத்தின் போது உள்நாட்டு விமான கையாள்கைகள் 138 நிகழ்ந்துள்ளது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இந்த வருடத்தின் சனவரி 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை 2,919 சுற்றுலாப் பயணிகள் மத்தள விமான நிலையத்திலிருந்து இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக மத்தள விமான நிலைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதியாகும். இந்த வருடத்தில் 36,137 விமான பயணிகள் கையாளப்பட்டுள்ளதுடன் 1,520 விமாங்களும் கையாளப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் 40,386 விமான பயணிகளின் கையாள்கைகள் மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த வருடத்தின் போது கையாளப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 2,924 ஆகும். 2015 நல்லாட்சி அரசாங்கம் ஆட்ச்சிக்கு வந்ததைத் தொடர்ந்து மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் செயற்பாடுகள் குறைக்கப்பட்டதுடன் அங்கு நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். நல்லாட்சி கால எல்லையின் போது மத்தளை சர்வதேச விமான நிலையத்தை பிரபல்யப்படுத்துவதற்கு முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததுடன் அதனை செயலிழக்கச் செய்வதற்கு அந்த அரசு நடவடிக்கை எடுத்தது எனவும் சுட்டிக் காட்டினார்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது சனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த விமான நிலையம் “ வெளிநாட்டு சுற்றுலாத் தளமாக” மேம்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சர்வதேச விமான போக்குவரத்துச் சேவைக் கம்பனிகளை கவர்ந்து கொள்வதற்காக மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய கட்டணங்கள் விடுவிப்புச் செய்யப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக, சர்வதேச விமான போக்குவரத்துக் கம்பனிகளுடன் கலந்துரையாடி அவர்களின் விமான சேவைகளை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வருதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதன் பெறுபேறொன்றாக தற்பொழுது ஸ்கைப், களிவர், உஸ்பகிஸ்தான் விமான சேவை, கடார் எயார் ஏசியா, மாலைதிவைன் விமான சேவை, சலாம் எயார் போன்ற சர்வதேச விமான போக்குவரத்துச் சேவைகள் மத்தளயிலிருந்து தமது விமானப் பயணங்களை மேற்கொள்கின்றன.
மேலும், மத்தளை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசு தமது விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் பிரதான வகை தீர்வை வரியற்ற விற்பனை நிலையங்கள் இரண்டு, தேனீர் விற்பனை நிலையமொன்று, வீட்டு மின் உபகரண விற்பனை நிலையங்கள் இரண்டு, சுற்றுலா சேவை கரும பீடமொன்று, கையடக்க தொலைபேசி தொலைத்தொடர்பு கரும பீடமொன்று மற்றும் வங்கிக் கரும பீடமொன்று என்பன தாபிக்கப்பட்டுள்ளன. எதிர் காலத்தில் விமான கையாள்கைகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து விமான நிலையத்தின் வசதிகளை மேலும் விஸ்தரிப்புச் செய்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.