Raid Amazone சாகச போட்டித் தொடர் தொடர்பாக இந்நாடு தெரிவு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக இலங்கை பாதுகாப்பான நாடாகும் என்ற செய்தியொன்றை உலகிற்கு வழங்குவதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இன்று (16) ஆம் திகதி சீகிரியையில் ஆரம்பமாகிய Raid Amazone சாகச விளையாட்டு நிகழ்ச்சித்திட்டதில் கலந்து கொண்டு கௌரவ அமைச்சர் இவ்வாறு கூறினார்கள்.
கொவிட் தொற்று நோயின் பின்னர் இந்நாட்டில் நடைபெறுகின்ற பாரிய சுற்றுலா நிகழ்ச்சித்திட்டமான Raid Amazone சாகச நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக 600 விளையாட்டுப் போட்டியாளர்கள் பங்குபற்றுவார்கள். இரண்டு கட்டங்களின் கீழ் நடைபெறும் இந்த போட்டித் தொடரின் முதலாவது கட்டம் 14 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறுவதுடன் இரண்டாம் கட்டம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் ஏபிறல் மாதம் 6 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கவுடுள்ள, மெதிரிகிரிய, வேவல, கண்டலம, சீகிரிய, மஹவில்கமுவ பிரதேசங்களை அண்டியதாக இந்த போட்டித் தொடர் நடைபெறும்.
போட்டியாளர்கள் 253 பேர் மற்றும் பதவியணி 63 பேரின் பங்குபற்றலுடன் முதலாவது கட்டம் நடைபெறுவதுடன் இரண்டாவது கட்டம் தொடர்பாக 216 போட்டியாளர்கள் பங்குபற்றுவார்கள். பதவியணியின் 63 பேர் இதனோடு சேர்ந்து கொள்வார்கள். பதவியணி தொடர்பாக வைத்தியர்கள் 06 பேர், விநியோக பதவியணியினர், மீட்ப்பு நீச்சல் விளையாட்டுப் போட்டியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ தொழில்நுட்பவியலாளர் போன்றோர் உள்ளடங்குகின்றனர்.
பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட ஜனரன்ஜகமான வருடாந்த சாகச விளையாட்டு போட்டியொன்றான இந்த போட்டித் தொடரில், ஓடுதல், வள்ளம் செலுத்துதல், மவுன்டன் மதிவண்டி மிதித்தல், வரைபடம் மற்றும் திசைகளை அடிப்படையாகக் கொண்டு கரடு முறடான பாதையொன்றின் ஊடாக நடந்து வருதல், ஈட்டியெறிதல் போன்ற போட்டிகள் பல இந்த போட்டித் தொடரில் உள்ளடங்குகின்றன.
இம்முறை போட்டியின் அனுசரணையளிக்கும் விமான சேவையாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் செயற்படும். இம்முறையின் தொனிப்பொருளாக சீகிரிய உள்ளது. சீகிரிய கோட்டையின் தனித்துவமான விசேட தன்மையை வெளிப்படுத்தும் வகையில் விசேட உத்தியோகபூர்வ உடையொன்று இதற்கு உருவாக்கப்பட்டுள்ளது. போட்டித் தொடர் தொடர்பாக பங்குபற்றுகின்ற வெளிநாட்டு விளையாட்டு வீரர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்கு சிறிலங்கன் விமான சேவைக் கம்பனி விசேட விமானமொன்றினை சோடித்துள்ளது.
அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவித்த சுற்றுலா அமைச்சர் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகள் மத்தியில் இலங்கை பாதுகாப்பான நாடொன்று என உலகிற்கு அறிவிக்கும் செய்தியொன்றாகும். இதன் ஊடாக பாரிய பூகோள பார்வையாளர் தொகுதியொன்றினை கவர்ந்து கொள்வதற்கும், ஐரோப்பாவிற்கு வெளியில் சென்று சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை மீது திருப்பிக் கொள்வதற்கும் இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன.
நாட்டில் நிலவுகின்ற சிற்சில நிலமைகள் சுற்றுலா கைத்தொழிலையும் பாதித்துள்ளது. எனினும், அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை வழங்கி நாட்டினை இயல்பு நிலைக்கு ஆக்குவதற்குத் தேவையான செயற்பாடுகள் தற்பொழுது எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுற்றலாக் கைத்தொழிலுக்கு பிரச்சினைகள் ஏற்படமாட்டாது. சுற்றூலாப் பயணிகளின் போக்குவரத்து தொடர்பாக பயன்படுத்துகின்ற வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் போது முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வலயங்களை மின் துண்டிப்பிலிருந்து நீக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தற்பொழுது அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட கொவிட் பிரச்சினையுடன் எமது சுற்றுலா கைத்தொழில் துறை வீழ்ச்சியுற்றுள்ள சந்தர்ப்பத்தில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நாங்கள் நாட்டை திறந்தோம். நாடு திறக்கப்பட்டு சில மாதங்களுக்குள் மாதமொன்றுக்கு சுற்றுலாப் பயணிகள் ஒரு இலட்சம் பேர் இந்நாட்டுக்கு வருகை தரும் நிலைமைக்கு நாட்டை கட்டியெழுப்ப எமக்கு முடிந்தது.
இந்நாட்டின் சுற்றுலா கைத்தொழில் முறையாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டும் சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார சிக்கல்களிலிருந்து வெளியேறுவதற்கு சுற்றுலா கைத்தொழில் கொவிட் தொற்றுநோயிற்கு முன் இருந்த நிலைமையிலும் பார்க்க உயர் நிலைக்கு கொண்டு வருதல் வேண்டும் என சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டுக்கு பிரான்ஸ் நாட்டு தூதுவர் எரிக் லெவடு, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, விமான நிலைய மற்றும் விமானக் கம்பனிகளின் தலைவர் அசோக் பதிரகே உள்ளடங்கலாக மேலும் பலர் இந்த ஊடக சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.
நாங்கள் கடந்த காலங்களில் பிரான்ஸிற்கு வெளிநாட்டு சுற்றுப் பயணமெனர்றை மேற்கொண்டோம். அச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கன் விமானக் கம்பனி எம்முடன் ஒன்றிணைந்து இந்த போட்டித் தொடரை இந்நாட்டுக்கு பெற்றுக் கொள்வதற்கு செயற்பட்டது. இந்தப் போட்டித் தொடருக்கு விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்தல் நடைபெறுவது நிகழ்ச்சித்திட்டமொன்றை நடாத்தியாகும். அந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது இலங்கை தொடர்பாக பாரிய பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் அவ்வாறான பிரச்சார நிகழ்ச்சித்திட்டத்தை செய்திருந்தால் பாரிய தொகைப் பணம் செலவாகியிருக்கும். அவர்கள் சிறிலங்கன் விமானக் கம்பனியை தெரிவு செய்தமையினாலும் எமக்கு வருமானம் கிடைக்கின்றது. இந்தப் போட்டித் தொடர் தொடர்பாக வருகை தந்திருப்பது பெண்கள் ஆகும். இன்னும் சில நாட்களில் அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களும் குடும்பமாக இந்த நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
அதே போன்று ரஸ்யா மற்றும் உக்ரெய்ன் நாடுகளுக்கிடையேயான யுத்த நிலைமை காரணமாக எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா, நிவ்சிலாந்து, கனடா போன்ற நாடுகளில் பிரச்சார மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்கும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.