இந்த ஆண்டின் முதல் 65 நாட்களினுள் சுற்றுலாப் பயணிகளின் வருகை 02 இலட்சத்தை தாண்டியுள்ளது. அதன் பிரகாரம் இந்த ஆண்டின் சனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நேற்று (06 ஆம் திகதி) வரை இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,798 ஆகும் என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிக்கைக்கு ஏற்ப இந்த ஆண்டின் மார்சு மாதத்தின் முதல் 06 நாட்களினுள் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 21,964 ஆகும். கடந்த சனவரி மாதத்தில் இந்நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் 82,327 பேர் வருகை தந்துள்ளதுடன் பெப்ரவரி மாதத்தில் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் 96,507 ஆகும். இரண்டு வருடங்களின் பின்னர் மாதமொன்றில் இந்நாட்டுக்கு வருகை தந்த அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை இதுவாகும்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிக்கைக்கு ஏற்ப மார்சு மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தந்திருப்பது இந்தியாவிலிருந்தாகும். அந்த எண்ணிக்கை 4,395 ஆகும். ரஸ்யா சோசலிசக் குடியரசிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 3,094 பேர் வருகை தந்துள்ளதுடன் ஜேர்மனி நாட்டிலிருந்து 2,240 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸ் நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 969 பேரும் வருகை தந்துள்ளனர். கடந்த இரண்டு மாத கால அறிக்கைகளை கவனத்திற் கொண்டு பார்க்கின்ற போது இந்நாட்டுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பது ரஸ்யா குடியரசினால் ஆகும்.
இலங்கையை உலகின் புதிய சுற்றுலாச் சந்தையாக இலக்கு வைத்து தற்பொழுது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னர் இலங்கை சுற்றுலா பயணத் தளமொன்றாக மேம்படுத்தப் படாத நாடொன்றாக பல நாடுகள் மத்தியில் காணப்பட்டதுடன் தற்பொழுது அந்நாடுகளின் கவனம் இந்நாட்டின் மீது செலுத்தப்பட்டுள்ளத என்றும் அந்நாடுகளை இலக்கு வைத்து விசேட சுற்றுலா மேம்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இதற்கு மேலதிகமாக பூகோள சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தையும் இந்த ஆண்டின் போது ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டின் போது அமெரிக்க டொலர் 56 மில்லியன் தொகையை வழங்குவதற்கு நிதி அமைச்சர் நேற்று உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிரகாரம் அந்தச் செயற்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.