கடந்த வார இறுதியில் நீண்ட விடுமுறையின் போது இந்நாட்டின் பூங்காவைப் பார்வையிடுவதற்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் ஒரு கோடிக்கு அண்மித்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தைப்பொங்கல், வார இறுதி சனி, ஞாயிறு மற்றும் துருது போயா தினம் ஆகியன ஒன்றாக வந்தமையினால் அதிகளவானவர்கள் சுற்றுலா சென்றமையினைக் காண முடிந்ததுடன் அதிகமானவர்கள் பூங்காவைப் பார்வையிடுவதற்கு 16 ஆம் திகதி வருகை தந்திருந்தனர். அன்றைய தினம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 23,342 பேர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 425 பேர் பூங்காவைப் பார்வையிட்டுள்ளதுடன் அதன் மூலம் 2,859,840 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என கௌரவ அமைச்சர் குறிப்பிட்டார்.
தைப்பொங்கல் விடுமுறை தினமான 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூங்காவைப் பார்வையிடுவதற்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 11,617 பேர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 423 பேர் வருகை தந்துள்ளதுடன் அதன் ஊடாக 1,840,500 ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த 15 ஆம் திகதி சனிக்கிழமை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 16,175 பேர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 493 பேர் பூங்காவைப் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளதுடன் அதன் ஊடாக 2,381,340 ரூபா வருமானம் கிடைத்துள்ளது. துருது போயா தினத்தின் போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 18,747 பேர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 314 பேர் வருகை தந்துள்ளனர். அன்றைய தினம் 2,250,140 ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. வார இறுதி நீண்ட விடுமுறையில் மாத்திரம் பூங்காவைப் பார்வையிடுவதற்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் 9,331,820 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
சுற்றூலாக் கைத்தொழிலில் இந்தப் புதிய எழுச்சி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பமொன்றாக மாற்றிக் கொள்ளுமாறு கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை கேட்டுக் கொள்வதாகவும் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.