நாட்டை மீண்டும் மூடுவதற்கான ஆயத்தமேதும் இன்னும் இல்லை என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் அரசு அது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்பொழுது இந் நாட்டிற்கு வருகை தந்துள்ள பீபீசி நிறுவனத்தின் தென்னாசிய முகாமையாளர் Rahool sood மற்றும் தென்னாசியாவுக்கான சந்தைப்படுத்தல் பணிப்பாளர் Vishal Bhatnagar ஆகியோர்களை கடந்த வெள்ளிக்கிழமை (03) ஆம் திகதியன்று அமைச்சர் தமது அமைச்சில் சந்தித்த சந்தர்ப்பத்தில் இது பற்றிக் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையம் பற்றி உங்களுடைய அபிப்பிராயம் என்வென்று பீபிசி நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு வினவினார். அதற்கு பதில் வழங்கியதோடு தாமதமின்றி விமான நிலையத்தின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன என ராகுல் சூட் அவர்கள் கூறினார்கள். இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணியொருவருக்கு எமது நாடு பற்றி முதலாவதாக உணர்வேற்படும் இடமாக விமான நிலையம் இருப்பதுடன் அதன் செயற்பாடுகள் வினைத்திறனாக மேற்கொள்ளப்படுதல் மிக முக்கியம் என்றும் கூறினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிக்கும் செயற்றிட்டம் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு கூறினார்கள். 2023 ஆம் ஆண்டாகும் போது விமான நிலைய செயற்றிட்டத்தை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அப்போது வருடாந்தம் 15 மில்லியன் விமான பயணிகளை கையாளமுடியும் வகையில் வசதிகள் காணப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையை ஒரு நாடாக உலக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்கு அரசு முன்னெடுத்துச் செல்லும் செயற்பாடுகள் தொடர்பாக தமது பாராட்டுகளை தெரிவித்த பீபீசி பிரதிநிதிகள் அது தொடர்பாக தமது ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு உடன்பாட்டைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திருமதி கிமாலி பிரணாந்து அவர்களும் கலந்து கொண்டார்கள்.