
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டதாகும். இச்சட்டத்தின் 23(1) பிரிவுக்கு ஏற்ப இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினாலேயே சுற்றுலா அபிவிருத்தி நிதியம் கண்காணிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம்
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகமானது இலங்கை சனநாயக சோசலிச குடியரசுப் பாராளுமன்றத்தின் 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டதாகும். இப் பணியகமானது இலங்கைத் தேசத்தினை சுற்றுலா செல்வதற்கும் பயணம் செல்வதற்குமானதொரு இலக்கு நாடாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஊக்குவித்து சந்தைப்படுத்துவதற்கான வகிபாகத்தினைக் கொண்டு விளங்குகிறது.

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம்
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகமானது இலங்கையிலுள்ள அரச அங்கீகாரம் பெற்ற ஒரேயொரு முன்னோடி நிறுவனமாகத் திகழ்வதோடு, இது விருந்தோம்பல் மற்றும் பயணத் துறை தொடர்பில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமான சம்பந்தப்பட்ட பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் தாபிக்கப்பட்டதாகும்

இலங்கை மாநாட்டுப் பணியகம்
இலங்கை மாநாட்டுப் பணியகமானது சர்வதேச சந்தையில் MICE வாய்ப்பின் பின்னரானதொரு தேடலாக இலங்கைக்கான வாய்ப்புக்களை மேம்படுத்துவதிலும் அவற்றைத் தட்டிக்கொள்வதிலும் அயராது பணியாற்றிவருகிறது. மேலும் இந்தப் பணியகத்தின் செயற்பாடுகளில் MICE சுற்றுலாவுடன் தொடர்பான துறைகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த ஒருங்கிணைப்புச் சேவைகளும் உள்ளடங்குகின்றன.