c1 c2 

ஆகஸ்ட் 01 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு திறப்பதற்கு இணையாக மத்தள விமான நிலையத்தையும் சர்வதேச நடவடிக்கைகளை தொடங்க அரசு ஆயத்தமாக உள்ள்ளது. இது தொடர்பாக விமான சேவைகள் அதிகார சபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவதால், அதிநவீன தோல் வெப்பநிலையினைக் கண்டறிதல் புகைப்படக் கருவி உபகரணங்கள், நவீன தகவல் தொடர்பு முறைமைகள், அகச்சிவப்பு வெப்பமானிகள், சிறப்பு முகமூடிகள், பி. பி. சி. முகமூடிகள் மற்றும் கையுறைகள் போன்ற உபகரணங்களை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனங்களுக்கு வழங்கும்  நிகழ்வு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டபோது இதுபற்றிக் குறிப்பிட்டார்.

விழா இன்று (16) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. ரூபா 45 மில்லியன் பெறுமதியான  இந்த உபகரணத் தொகுதியை கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவைக நிறுவனங்களுக்கு நன்கொடையாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு வழங்கியது. ஜப்பான் அரசும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இந்த நன்கொடைகளை அந்தந்த அமைப்புகளுக்கு வழங்கியிருந்தன.

உபகரணத் தெகுதிகளைளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றிய பிரசன்னா ரணதுங்க அவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தாய்நாட்டுக்கு  திருப்பிக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகயினை  உடனடியாக நிறைவுக்குக் கொண்டுவருமாறு ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, ஆகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தர விரும்பும் அனைவரையும் அழைத்து வர முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துதுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இணையாக சுற்றுலாப் பயணிகளுக்காக மத்தள விமான நிலையமும் திறக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் இது தொடர்பாக ஏற்கனவே விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதெனவும் அவர்  குறிப்பிட்டார். மத்தள விமான நிலையத்திற்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் தொடர்புடைய விமான நிலைய மற்றும் விமான சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த பெப்ரவரி மாத்த்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றிருந்தது. அதன்படி, பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே மத்தள விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இண இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டிற்கு வருகை தரும் எந்தவொரு நபரும் விமான நிலையத்தில் பி. சி. ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அதனைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் என்று குறிப்பிட்ட பிரசன்ன ரணதுங்க அவர்கள் விமான நிலையத்தில் பி. சி. ஆர். பரிசோதனை செய்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் நாட்டினைப் பார்வையிட முடியும் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக செயல்படுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விசேடமாக சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் கடல் வழியாக வருவதைத் தடுக்க இந்த நாட்களில் ஒரு தனியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரசன்ன ரனதுங்க அவர்கள் இவை அனைத்தும் கோவிட் 19 நோயினை நுழைவதைத் தடுப்பதற்காக என்றுறும் அவர் மேலும் தெரிவித்தார்.

விமான நிலைய மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜி. ஏ. சந்திரசிரி, சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் சாந்தா குலசேகர ஆகியோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

‘Go on a couch safari’ concept to be promoted by Sri Lanka Tourism

With the recent sharp decline in tourism arrivals due to the global pandemic and flight restrictions, Sri Lanka Tourism has initiated a novel approach to promote the island through a concept branded as “Go on a Couch Safari” covering wildlife streams

Continue Reading

ENGAGING KEY SOURCE COUNTRY TOURISM STAKEHOLDERS VIA WEBINARS SLTPB teams up foreign missions to upsurge Post COVID Tourism

Sri Lanka Tourism Promotions Bureau (SLTPB) conducted a series of Webinars for key markets in collaboration with the Sri Lanka High Commissions overseas...

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

மாவட்டம்