சுற்றுலாத்துறை அபிவிருத்தி இவனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சானது 2103/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 2018 மார்கழி 28 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. சுற்றுலாத்துறை தொடர்பிலான பொறுப்புக்களைக் கொண்டு தாபிக்கப்பட்ட இவ் அமைச்சின் பிரதான இலக்குகளுள், பொருத்தமான கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை வேலைச்சட்டகம் ஆகியவற்றை வகுத்தல் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் சுற்றுலாவூக்கான இலக்கு நாடாக இலங்கை ஊக்குவிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தல், மற்றும் அமைச்சின் கீழ் செயற்படும் நோக்கில் வர்த்தமானி மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் நிதிசார் மேற்பார்வை ஆகியற்றைப் பேணுதல் போன்றனவும் உள்ளடங்குகின்றன.
இவ் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் பின்வரும் திணைக்களங்களும் நியதிச்சட்ட முகவர் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன:
- இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
- இலங்கை சுற்றுலா மற்றும் விடுதி முகாமைத்துவ நிறுவனம்
- இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்
- இலங்கை மாநாட்டுப் பணியகம்
- தேசிய மிருகக்காட்சிச்சாலை திணைக்களம்
- தேசிய தாவரப் பூங்கா திணைக்களம்
- வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
- வனசீவராசிகள் நம்பிக்கைப் பொறுப்பு
- கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்
அமைச்சுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினரின் எண்ணிக்கை 79 ஆகக் காணப்படுகின்ற அதேவேளை, 2018.12.31 ஆம் திகதியிலுள்ளவாறு அமைச்சின் தற்போதைய ஆளணியினரின் எண்ணிக்கை 71 ஆகக் காணப்படுகிறது(சுற்றுலா பிரிவு). இதற்கிணங்க உதவி மற்றும் தொழிற்பாட்டுத் தரங்களில் 8 வெற்றிடங்கள் தற்போது காணப்படுவதோடு, அவை பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிரப்பப்படவேண்டியவையாகும்.
அங்கீகரிக்கப்பட்ட ஆளணி (சுற்றுலா பிரிவு)


No | ஊழியர் நிலை | அங்கரிக்கப்பட்ட | பணிபுரிந்துவரும் | வெற்றிடங்கள் |
---|---|---|---|---|
1 | சிரேஷ்ட நிலை | 16 | 15 | 01 |
2 | இரண்டாம் நிலை | 04 | 03 | 01 |
3 | மூன்றாம் நிலை | 37 | 31 | 06 |
4 | ஆரம்ப நிலை | 22 | 22 | - |
மொத்தம் | 79 | 71 | 08 |